இஞ்சி, பூண்டு மருந்து சாப்பிடுங்கள்!

Loading...

இஞ்சி, பூண்டு மருந்து சாப்பிடுங்கள்!உடல் நலப்பிரச்சனைகள் என்றால் மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகள் எடுத்துக்கொள்வது நல்லதுதான்.
ஆனால், வீட்டிலேயே கிடைக்கும் சில இயற்கை மருந்துகளை சாப்பிட்டுவிட்டு முடியவில்லை என்றால் மருத்துவரிடம் செல்லுங்கள்.

கீழே 3 மருத்துவகுறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன,


இஞ்சி பூண்டு மருந்து

மிதமிஞ்சிய சளியாலும், சளி கெட்டிப்படுவதாலும் ஏற்படும் நோய் இது. கோழை கட்டுதல் என்றும் அழைக்கப்படுகிறது. வெள்ளைப் பூண்டை அரைத்து, ஒரு துணியில் கட்டி, அதனை விளக்கில் காட்டிச் சுடவைத்து, அத்துணியைப் பிழிந்து இஞ்சிச் சாற்றோடு கலந்து குடித்தால், கபம் நீங்கும்.

வெள்ளைப் பூண்டைச் சுட்டு அல்லது வேக வைத்து கடைந்து, தினமும் இரண்டு அல்லது மூன்று வேளை குடித்தாலும், குப்பைமேனிக் கீரையை அரைத்துச் சாறு குடித்து வந்தாலும், இந்நோய் குணமாகிவிடும்.


சுக்கு மல்லி காபி

டீ, காபி குடிப்பதால் நம் உடலுக்கு கேடு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க விரும்புவோர், மாற்று பானமாக சுக்கு காபி பருகலாம். இதை காலை, மாலை பானங்களுக்கு பொருத்தமானது.

சுக்கு, சீரகம் ஆகிய பொருட்களை சம அளவும், கொத்தமல்லி இரு மடங்கும் எடுத்து, பொடி செய்து கொள்ள வேண்டும்.

சுக்கு மல்லி காபி தயாரிக்க, 200மில்லி தண்ணீரைக் கொதிக்க வைத்து, 1 டீஸ்பூன் தூள் போட்டு சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கி, வடிகட்டி நாட்டு சர்க்கரை சேர்த்து அருந்தவும்.

செரிமானக் குறைவு, பசியின்மை, மந்தம், வாயு, மலச்சிக்கல், சளி, ஆஸ்துமா, சர்க்கரைநோய், வெள்ளைப்படுதல், சோம்பல் போன்ற பிரச்னைகள் தீரும்.


க்ரீன் டீ

கிரீன் டீயில், ஆறு விதமான பாலிபீனால்கள் என்ற சத்துப் பொருள் கலந்துள்ளன. இவை, மனித உடலுக்கு புத்துணர்ச்சி தருவது மட்டுமல்லாமல், மனித உயிர்களை காக்கவும் செய்கின்றன.

இதய நோய் வராமல் தடுக்கிறது. இதில் உள்ள தியோபிளவின் என்ற நுண் சத்து, ரத்தத்தில் இன்சுலினை அதிகரித்து, குளூக்கோஸ் வினையை ஊக்கப்படுத்தி, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

உடலில் உள்ள திரவ அளவை சமன் செய்து, சோம்பலை போக்குகிறது, இதில் உள்ள பாலிபீனால்கள் புற்றுநோய் செல்கள் வளரவிடாமல் அழிக்கிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply