ஆபாச தகவல்களை நீக்க கூகுளிடம் குவியும் கோரிக்கைகளுக்கு இன்னும் பதில் அளிக்காததால் சர்ச்சை

Loading...

ஆபாச தகவல்களை நீக்க கூகுளிடம் குவியும்கடந்த 6 மாதங்களில் மட்டும் உலக நாடுகள் கூகுள் நிறுவனத்திடம் ஏராளமான கோரிக்கைகளை வைத்திருக்கின்றன. இணையதளம் என்றாலே கூகுள்தான் அனனவருக்கும் ஞாபகம் வரும். ஏனெனில் எல்லோருமே தங்களுக்குத் தேவையான தகவல்கள் அனைத்தையும் கூகுள் தேடுபொறி தளத்தில்தான் தேடுகின்றனர்.

அந்த வகையில் கூகுள் தனது தேடுதல் தளத்தில் ஏராளமான தகவல்கள், படங்கள், வீடியோக்கள் என எல்லாவற்றையும் வாரி வழங்குகிறது. அதுபோல் கூகுள் வழங்கும் யுடியூப் வீடியோ சேவை இளையோர் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது.

இந்த நிலையில் கூகுள் ஒரு பரபரப்பான தகவலை வெளியிட்டிருக்கிறது. அதாவது கடந்த 6 மாதங்களில் மட்டும் 1000க்கும் மேற்பட்ட கோரிக்கை விண்ணப்பங்கள் உலகின் பெரும்பாலான நாடுகளில் இருந்து கூகுளுக்கு வந்திருக்கின்றன. அதாவது கூகுள் வெளியிடும் ஒரு சில தகவல்கள், படங்கள் மற்றும் வீடியோக்களை தேடுதல் தளத்திலிருந்து நீக்க வேண்டும் என்று உலக நாடுகளில் இருந்து கோரிக்கைகள் வந்திருக்கின்றன.

மேலும் குறிப்பிட்ட 12000 தகவல்கள் நீக்கப்பட வேண்டும் என்று அதிகமான நாடுகள் கோரிக்கை விடுத்திருக்கின்றன.

கூகுள் யுடியூப்பில் வரும் ஒரு சில வீடியோக்களை நீக்க கூகுள் மறுத்து வருகிறது. குறிப்பாக யுடியூப்பில் வரும் ஒரு சில நாடுகளின் அரசியல்வாதிகள், இராணுவத்தில் இருப்போர், குடிமகன்கள் ஆகியோரின் விநோத செயல்பாடுகளை நீக்க முடியாது என்று கூகுள் தெளிவாக கூறிவிட்டது.

மற்ற கோரிக்கைகளுக்கு இன்னும் கூகுள் பதில் அளிக்கவில்லை.

Loading...
Rates : 0
Loading...
VTST BN