ஆந்திரா ரைஸ் பால்ஸ்

Loading...

ஆந்திரா ரைஸ் பால்ஸ்

தேவையானவை:
அரிசி மாவு – ஒரு கப், எள், சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், இஞ்சி – சிறிய துண்டு, பச்சை மிளகாய் – 4, பெருங்காயம் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.செய்முறை:
இஞ்சியுடன் பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைக்கவும். அரிசி மாவுடன் சூடான எண்ணெய் நான்கு டீஸ்பூன் விட்டு பிசிறவும். பிறகு, இதனுடன் எள், சீரகம், உப்பு, பெருங்காயம், இஞ்சி – பச்சை மிளகாய் விழுது, தேவையான அளவு வெந்நீர் சேர்த்து, மாவை கெட்டியாக சப்பாத்தி மாவு போல பிசையவும். ஒரு மணி நேரம் ஊறவிட வும். பின்னர், சீடை போல உருட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.


குறிப்பு:
இஞ்சி, பச்சை மிளகாய் விழுதுக்கு பதிலாக, மிளகாய்த்தூள் சேர்த்தும் செய்யலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply