ஆண்களே தாடி வளர்வதில் தாமதமா? : இத கொஞ்சம் ட்ரைப் பண்ணிப்பாருங்க…!

Loading...

ஆண்களே தாடி வளர்வதில் தாமதமா இத கொஞ்சம் ட்ரைப் பண்ணிப்பாருங்க...!
உணவு

புரதச் சத்து அதிகம் உள்ள உணவு பொருட்களும் மற்றும் மன அழுத்தம் இல்லாத வாழ்வும் தாடியை சீக்கிரம் வளர்க்க உதவுகின்றன. முடி வளர்வதற்கு தேவையான ஊட்டத்தை புரதச்சத்தே தருகின்றது.

அதை செயல்படுத்த நல்ல தூக்கம் தேவைபடுகின்றது. தினமும் எட்டு டம்ளர் தண்ணீர் குடிப்பது அடர்த்தியான நீளமான முடியை வளர செய்யும்.

மன அழுத்தம் இல்லாமல் இருப்பதும் இதில் மிகவும் அவசியமானதாகும். இல்லையென்றால் அது இருக்கும் முடியையும் உதிர செய்துவிடும்.


வளர விடுங்கள்

முடி வளரும் பருவத்தில் கொஞ்சம் ஏற்றமும் இறக்கமுமாக அமைந்திருக்கும். மெதுவாக வளரும் முடியும் தாடி வளர வளர சீக்கிரம் முளைத்து வளரும்.

இவ்வாறு வளரும் போது அவை சமமாகவும், ஏதேனும் சமமில்லாத திட்டுகள் இருந்தால் அவையும் மறைந்துவிடும். ஆகையால் முடி வளர்வதற்காக நேரம் கொடுங்கள்.


கண்டிஷனர்

நல்ல முடி இருந்தால் மட்டும் போதாது அதை நல்ல முறையில் கண்டிஷன் செய்து வைக்க வேண்டும்.

இது தாடி முடியை வெட்டச் செய்யாமல் பாதுகாக்கும்.

காஸ்டர் எண்ணெய் இதற்கு மிக சிறந்த கண்டிஷனிங் பொருளாக அமைகின்றது.

கண்டிஷனர் உங்கள் தாடியை சரியாக வளர வைக்கும். ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், பெப்பர்மின்ட் எண்ணெய் ஆகியவை முகத்தில் இருக்கும் முடிகளுக்கு ஊட்டமளிப்பதில் சிறந்தவையாகும்.


இறந்த தோலை நீக்குதல்

உங்கள் வாழ்க்கை முறைக்கேற்ப முகத்தில் உள்ள தேவையற்ற இறந்த திசுக்களை நீக்கி விடுங்கள். நல்ல ஸ்கிரப்-ஐ பயன்படுத்தி இதை செய்யுங்கள்.

இறந்த தோல் தசைகளை எடுத்து விடுதல் புதிய தசைகளையும் நல்ல முடியையும் வளரச் செய்யும்.

ஆண்களின் சருமத்திற்கென்று தயார் செய்யப்பட்ட எக்ஸ்போலியேட் மாஸ்க்-ஐயும் பயன்படுத்தி பாருங்கள்.


வைட்டமின்கள்

வைட்டமின் ‘பி’ யை உங்கள் உணவிலும் அழகு சாதனப் பொருட்களிலும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

வைட்டமின் பி1, வைட்டமின் பி6, வைட்டமின் பி12 ஆகியவை முடியை சீக்கிரம் வளர வைக்க உதவும்.

பையோடின் என்ற இணை சேர்க்கையை எடுத்துக் கொள்வதும் முடி மற்றும் நகத்தை விரைவாக வளர்க்க உதவும்.

பையோடின் – கல்லீரல், காலிபிளவர், பீன்ஸ், மீன், கேரட், வாழைப்பழம், சோயா, முட்டை மற்றும் தானியங்களில் உள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply