ஆண்களே! உங்கள் முகம் ஏன் எப்போதும் பொலிவிழந்து உள்ளது…?

Loading...

ஆண்களே! உங்கள் முகம் ஏன் எப்போதும் பொலிவிழந்து உள்ளது...
மது அருந்துதல் :

ஆண்களிடம் உள்ள கெட்ட பழக்கங்களில் மற்றொன்று தான் மது அருந்துவது. மதுவை அளவுக்கு அதிகமாக அருந்துவதால், தூக்கத்தின் தரம் பாதிக்கப்படுவதோடு, சருமமும் பாதிக்கப்படும்.புகைப்பிடித்தல் :

வேலைப்பளு அதிகம் உள்ளதென்று, தங்களின் டென்சனைப் போக்குவதற்கு பல ஆண்கள் புகைப்பிடிக்கின்றனர்.

ஆனால் அப்படி புகைப்பிடிப்பதால், நுரையீரல் பாதிக்கப்படுவதோடு, உங்களின் சருமமும் தான் பாதிக்கப்படுகிறது.

குறிப்பாக புகைப்பிடித்தால், விரைவிலேயே முதுமைத் தோற்றத்தைப் பெறக்கூடும்.

எனவே முடிந்த அளவில் சிகரெட் பிடிப்பதை விரைவில் நிறுத்திக் கொண்டு, மன அழுத்தத்தைப் போக்க வேறு வழிகளைத் தேடுங்கள்.லேட் நைட் :

அலுவலகத்தில் இருந்து தாமதமாக வீட்டிற்கு செல்வது அல்லது நைட் பார்ட்டிகளில் கலந்து கொள்வதால், போதிய தூக்கம் கிடைக்காமல், அதனால் முகத்தின் பொலிவு பாதிக்கப்படுகிறது.

எனவே தினமும் தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.வெயிலில் சுற்றுவது :

ஆண்கள் வெயிலில் அதிகம் சுற்றுவார்கள். அப்படி சுற்றும் போது சூரியக்கதிர்களின் தாக்கம் சரும செல்களின் மீது அதிகம் இருப்பதால், சரும செல்கள் பாதிக்கப்பட்டு, அதனால் சரும சுருக்கம், கருமையான சருமம் போன்றவை ஏற்படுகிறது.

எனவே எப்போதும் வெயிலில் செல்லும் முன்னும் சன் ஸ்க்ரீன் பயன்படுத்துங்கள்.சரும பராமரிப்பு இல்லை :

100 சதவீத ஆண்களில் 30 சதவீத ஆண்களே தங்களின் சருமத்தின் மேல் அக்கறைக் கொண்டு சரியான பராமரிப்புக்களை மேற்கொள்கின்றனர்.

இதர ஆண்கள் தங்களின் சருமத்தற்கு எந்த ஒரு க்ரீம்மையும் பயன்படுத்துவதில்லை. இப்படி இருப்பது நல்லது தான்.

ஆனால் இன்றைய காலத்தில் மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழலால் கட்டாயம் தேவைப்படுகிறது.

எனவே சரும செல்களுக்கு பாதுகாப்பு தரும் க்ரீம்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்காதீர்கள்.மன அழுத்தம் :

மன அழுத்தத்துடன் இருந்தால், சரும செல்கள் தங்களைத் தாங்களே சரிசெய்து கொள்ள முடியாமல் போகும்.

அதனால் தான் மன அழுத்தத்துடன் இருக்கும் ஆண்களின் முகம் பொலிவிழந்து காணப்படுகிறது.

எனவே மன அழுத்தத்தைப் போக்குவதற்கு அன்றாடம் தியானம், யோகா போன்றவற்றில் ஈடுபடுங்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply