ஆண்களின் அழகை தக்க வைத்துக் கொள்வதற்கான சில இயற்கை டிப்ஸ்… | Tamil Serial Today Org

ஆண்களின் அழகை தக்க வைத்துக் கொள்வதற்கான சில இயற்கை டிப்ஸ்…

Loading...

ஆண்களின் அழகை தக்க வைத்துக் கொள்வதற்கான சில இயற்கை டிப்ஸ்...ஒவ்வொருவருக்கும் தாங்கள் அழகாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும்.

ஆண்களும் தங்களின் அழகின் மீது அதிக அக்கறை காட்டுகிறார்கள்.

அதனால் அவர்களின் மனதில் அழகு பராமரிப்பு குறித்து ஒருசில பொதுவான கேள்விகள் எழும்.

அப்படி எழும் கேள்விகளுக்கான சரியான பதில்கள் அவர்கள் கிடைக்காமல் இருப்பார்கள்.

ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை ஆண்களுக்காக, அவர்களின் மனதில் எழும் அழகு பராமரிப்பு குறித்த பொதுவான கேள்விகளுக்கான பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.


எத்தனை நாட்களுக்கு ஒருமுறை தலைக்கு குளிக்க வேண்டும்?

தற்போது மாசுக்கள் அதிகம் சூழ்ந்திருப்பதால், தினமும் தலைக்கு குளிப்பதே சிறந்தது.

இல்லாவிட்டால், தூசிகள் ஸ்கால்ப்பில் படிந்து, பொடுகு வளர ஆரம்பித்து, அதனால் முடி உதிர ஆரம்பிக்கும்.

எனவே தினமும் கெமிக்கல் அதிகம் நிறைந்த ஷாம்புக்களைப் பயன்படுத்தாமல், மைல்டு ஷாம்புக்களைப் பயன்படுத்துவது சிறந்தது.

மேலும் தலைக்கு குளித்து முடித்த பின்னர் டவல் பயன்படுத்தி தேய்த்து துடைக்காமல், கையால் அப்படியே இயற்கையாக உலர வைக்க வேண்டும்.

மேலும் முடிந்த வரையில் சீப்புக்களைப் பயன்படுத்துவது தவிர்த்து, விரல்களால் தலையை சீவிக் கொள்வது சிறந்தது.

Loading...
Rates : 0
VTST BN