ஆட்டு மூளை பொரியல்

Loading...

ஆட்டு மூளை பொரியல்
தேவையான பொருள்கள்:

ஆட்டு மூளை — 2
மிளகாய்தூள் — 1 1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் — 1/2 ஸ்பூன்
வெங்காயம் — 1/2 கப்
சோம்பு — 1/2 ஸ்பூன்
எண்ணைய் — 3 ஸ்பூன்
உப்பு — தே.அ


செய்முறை:

ஆட்டு மூளை மேல் பகுதியை தண்ணீரில் மெதுவாக கழுவி ஒரு கப் தண்ணீர் விட்டு மூடி வேகவிடவும். அடிக்கடி மூளையைப் புரட்டி போடவேண்டும். இல்லாவிட்டால் அடியில் பிடித்து விடும்.

மூளை நன்றாக வெந்தபின் இறக்கி ஆறவைத்து துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அதோடு மிளகாய்தூள் , மஞ்சள்தூள், உப்பை கலந்து மெதுவாக குலுக்கி வைக்கவும்.

பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி வைக்கவும். வாணலியில் அடுப்பில் வைத்து அதில் எண்ணைய் விட்டு காய்ந்தவுடன் நறுக்கிய வெங்காயத்தைப் போடவும். பொன்னிறமாக சிவந்தவுடன் மூளையை இந்த மசாலாவுடன் கொட்டி மிகவும் மெதுவாக கிளறவேண்டும். நன்றாக சிவந்தவுடன் இறக்கி பறிமாறலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply