ஆட்டு ஈரல் கிரேவி

Loading...

ஆட்டு ஈரல் கிரேவி

தேவையான பொருள்கள்:

ஆட்டு ஈரல் – கால் கிலோ
வெங்காயம் – இரண்டு
தக்காளி – 2
இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
எண்ணெய் – 2 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
தனியா தூள் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கரம் மசாலா தூள் – 1 ஸ்பூன்
பச்சைமிளகாய் – 2செய்முறை:

தக்காளி பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஈரலை நன்கு கழுவி கொள்ளவும்.
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது நிறம் மாறியதும் பொடியாக நறுக்கின வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கின தக்காளியை சேர்த்து கிளறவும்,
தக்காளி வதங்கியதும் சுத்தம் செய்து தண்ணீர் வடித்து வைத்துள்ள ஈரலை சேர்க்கவும். ஈரல் சேர்த்ததும் ஒரு நிமிடம் நன்கு ஒரு சேர கிளறவும்.
மசாலா வகைகள் (மிளகாய் தூள், தனியா தூள், உப்பு, கரம்மசாலா) அனைத்தையும் சேர்த்து நன்கு பிரட்டி இரண்டு நிமிடம் முடி போட்டு சிம்மில் வைத்து நன்கு வேக வைத்து இறக்கவும்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply