அஸ்வகந்தா எனும் அமுக்கரா கிழங்கு

Loading...

அஸ்வகந்தா எனும் அமுக்கரா கிழங்குஅமுக்கரா கிழங்கு ஆயுர்வேதத்தில் அஸ்வகந்தா என அழைக்கப்படுவது. அமுக்கரா லேகியம், அஸ்வகந்தா லேகியம், சூரணம் என பலரும் அறிந்திருப்போம். இது உடல் முழுமைக்கும் வலு கொடுக்கக்கூடியது. பால் உறுப்புகளும் உடலில் ஒரு அங்கம்தானே? இது செக்ஸ் உணர்வுக்கும் வலு கொடுப்பதால் அதை பிரதானமாக்கி விளம்பரம் செய்து விடுகின்றனர், உண்மையில் இது உடல் முழுமைக்கும் வலுவையும், புத்துணர்வையும் அளிக்க வல்லது. தினந்தோறும் அமுக்கராப்பொடியை தேனில் குழைத்தோ,அல்லது பாலில் கலந்தோ காலை,மாலை சாப்பிட்டு வந்தால் உடல் பலவீனம், காசம்,பசியின்மை,மூட்டு வலி,ஜீரணக்கோளாறுகள்,உடல் வீக்கம்,முதுமைத்தளர்ச்சி ஆகியவை நீங்கும், படுத்தவுடன் ஆழ்ந்த தூக்கம் வரும், உடலில் எப்போதும் ஒரு புத்துணர்ச்சி இருக்கும்.காமம் பெருக்கும். அமுக்கரா சூரணம் 10கிராம், கசகசா 30கிராம், பாதாம் பருப்பு 10கிராம், , சாரப்பருப்பு, 5கிராம், பிஸ்தாப்பருப்பு 5கிராம் என இரவில் ஊறவைத்து காலையில் தோல் நீக்கி அரைத்து 200மிலி பாலில் கலந்து பனங்கற்கண்டு சேர்த்து 90 நாட்கள் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர காணாமல் போன இளமை மீண்டும் நம் உடலில் குடி புகும்.வயாக்ரா என்பது செயற்கை, அமுக்கரா இயற்கை நமக்கு கொடுத்த கொடை.பக்க விளைவுகள் இல்லாதது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply