அவரைக்காய் பொரியல்

Loading...

அவரைக்காய் பொரியல்
தேவையானவை:
அவரைக்காய் – 100 கிராம், பாசிப்பருப்பு, தேங்காய்த் துருவல் – தலா 2 டீஸ்பூன், கடுகு, உளுத்தம் பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் – அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள் – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 1, உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
அவரைக்காயைப் பொடியாக நறுக்கி, உப்பு, மஞ்சள்தூள், பருப்பு சேர்த்து வேகவைத்து, தண்ணீரை வடித்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாயைத் தாளித்து, பெருங்காயத்தூள் சேர்க்கவும். வெந்த அவரைக்காய், வடித்த தண்ணீர், தேங்காய்த் துருவல் சேர்த்து, கிளறி இறக்கவும்.

குறிப்பு:
காய்ந்த மிளகாய்க்குப் பதிலாக, மிளகுத்தூள் போட்டுத் தாளிக்கலாம். தேங்காய்க்குப் பதிலாக, வெங்காயத்தை நறுக்கிப்போட்டும் தாளிக்கலாம்.

பலன்கள்:
அவரைக்காயில் நார்ச்சத்து அதிகம். தாது உப்புக்களும், சிறிதளவு பீட்டா கரோட்டினும் இருப்பதால், கண்களுக்கு நல்லது. பருப்பு சேர்ப்பதால், புரதச்சத்தும் கிடைத்துவிடும். வயிற்றுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும். மலச்சிக்கல் பிரச்னை வராது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply