அழகு குறித்த விடயத்தில் அதிக கவனம் செலுத்தும் பெண்கள்

Loading...

அழகு குறித்த விடயத்தில் அதிக கவனம் செலுத்தும் பெண்கள்பூமியில் பிறந்த ஒவ்­வொரு மனி­தனும் தனித்­து­வ­மா­ன­வர்கள் அது தோற்­ற­தத்­திலும் சரி இயல்­பு­க­ளிலும் சரி. அழகு என்­பது ஒவ்­வொரு வித­மாக அமைந்­தி­ருக்கும்.

அந்த வகையில் அழகு குறித்த விட­யத்தில் இன்­றைய பெண்கள் மட்­டு­மல்­லாது அன்­றைய பெண்­களும் கவனம் செலுத்­தி­யுள்­ள­மையை அறிய முடி­கி­றது.

மாற்­ற­மொன்று தான் மாறா­தது என்­ப­தற்­கி­ணங்க கால­மாற்­றத்­திற்­கேற்ப அழ­கினை மெரு­கூட்டிக் கொள்­வதில் ஆண்­களை விட பெண்­களே ஆர்வம் காட்­டு­கின்­றனர்.

ஆரம்ப கால­கட்­டங்­களில் ஒரு குடும்­பத்தில் ஒருவர்.உழைத்து குடும்­பத்தை வழி­ந­டத்­தக்­கூ­டிய நிலை­யி­லி­ருந்­தது. ஆனால் இன்றோ பொரு­ளா­தார தேவைகள் விலை­வாசி அதி­க­ரிப்பு நாக­ரிக முன்­னேற்றம் என்­பன வாழ்­வி­யலை சிக்­க­லாக்­கி­யுள்­ளன.

ஆகை­யினால் ஆண் பெண்­ணென இரு­வ­ரு­மாக உழைக்க நேரிட்­டுள்­ளது.

இதனால் தம் அழகு குறித்த பரா­ம­ரிப்பில் பெண்­க­ளுக்கு அதிக நேரத்தை செல­விட இய­லா­துள்­ளது.

இதன் கார­ணத்­தினால் அழகு நிலை­யங்­களை நாடு­கின்­றனர்.

ஒரு­வரை நாம் முதலில் பார்த்­த­வுடன் அவர் குறித்த பதிவை எமக்கு ஏற்­ப­டுத்­து­வது அவ­ரு­டைய தோற்­றமே. இதனை கொண்டே அவர்­களின் சிந்­தையில் எம்­மைப்­பற்­றிய இயல்­பு­களும் சித்­த­ரிக்­கப்­படும்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்­பது முது­மொழி, ஆனால் எம்­மு­டைய நடை­யுடை பாவ­னையும் இதில் பிர­தான பங்­கு­வ­கிக்­கி­றது என்­பது புது­மொழி. ஆகை­யினால் எம் இயல்­பி­னையும் பிர­தி­ப­லிக்­க­வல்ல தோற்ற அழகு குறித்த கவனம் எப்­போதும் பெண்­க­ளுக்கு இருக்க வேண்டும்.

முன்­னைய கால­கட்­டத்தில் அரச பரம்­ப­ரையை சேர்ந்த பெண்கள் தம் மேனி­ய­ழகை இயற்கை ஒள­ட­தங்­களை கொண்டு மெரு­கூட்டிக் கொண்­டார்கள். (பால், தேன், மஞ்சள், கஸ்­தூரி, மூலி­கைகள், பூக்கள், சந்­தனம்,துளசி) என பட்­டியல் நீளும் இங்கு சிந்­திக்­கத்­தக்க விடயம் என்­ன­வெனில்,

முன்னைய காலங்­களில் மனிதனின் சூழல் மீதான தாக்கம் பெரிய அளவில் இருக்­க­வில்லை. அவன் சூழ­லோடு ஒன்­றித்து வாழ்ந்தான் இன்றோ மானிட ஆதிக்­க­வாதம் மேலேங்­கி­யுள்­ள­மையால் சூழல் ஆதிக்­க­மா­கவே மாசு­பட்டு வரு­கின்­றது. இயல்­பா­கவே பெண்­களின் சரு­ம­மா­னது மென்­மை­யா­னது.

நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரும் வெப்பம் இவர்­களின் சரு­மத்தின் தன்­மையை பொழி­விழக்கச் செய்­கின்­றது.

ஓசோனில் ஏற்­பட்­டுள்ள துவாரம் கார­ண­மாக கழி­ஊ­தாக்­க­திர்­களின் தாக்­கமும் இதில் பிர­தான பங்கு வகிக்­கின்­றது.

இதனால் பெண்கள் தம்மை பாது­காத்து பரா­ம­ரிக்க வேண்­டிய தேவையும் நிர்­பந்­தமும் உள்­ளது.

என்­னதான் நாளுக்கு நாள் புதிய அழ­கு­சா­தனப் பொருட்கள் சந்­தைக்கு அறிமுகமானாலும் தரமானத்தை அறிந்து உபயோகிப்பது சிறந்தது.

இல்லையெனில் பாரிய பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

அழகு என்பது அவரவர் பராமரிக்கும் விதத்தில் தான் மெருகேற்றப்படும் ஆகவே பெண்களுக்கு அழகு குறித்த விடயத்தில் அதிகம் கவனம் தேவை.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply