அருகிவரும் ஆப்பிரிக்க காண்டா மிருகங்களை பாதுகாக்க அதிரடி நடவடிக்கை

Loading...

அருகிவரும் ஆப்பிரிக்க காண்டா மிருகங்களை பாதுகாக்க அதிரடி நடவடிக்கைஆப்பிரிக்க நாடுகளிலேயே அதிகளவில் விலங்குகள் வேட்டையாடப்படுவதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றது.
அதிலும் தந்தங்களை பெறுவதற்காக யானை, காண்டா மிருகங்கள் மிக அதிகமாக வேட்டையாடப்படுகின்றது.

இதனால் ஆப்பிரிக்க யானை மற்றும் காண்டா மிருகங்கள் அருகிவரும் இனமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

புள்ளிவிபரங்களின் படி கடந்த 2008ம் ஆண்டிலிருந்து இன்றுவரையான காலப்பகுதியில் சுமார் 5,940 காண்டா மிருகங்கள் தந்தத்திற்காக வேட்டையாடப்பட்டுள்ளன.

இதன் காரணமாக எஞ்சியுள்ள காண்டா மிருகங்களை பாதுகாக்கும் பொருட்டு 80 காண்டா மிருகங்களை ஆபிரிக்காவிலிருந்து அவுஸ்திரேலியாவிலுள்ள வன விலங்கு பூங்காக்களுக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

இதன் முதற்கட்ட நடவடிக்கை எதிர்வரும் மே மாதம் 6 காண்டா மிருகங்கள் கொண்டு செல்லப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply