அப்பிள் சாதனங்களில் புதிய முப்பரிமாண​த் தொழில்நுட்​பத்தில் கூகுள் மேப்

Loading...

அப்பிள் சாதனங்களில் புதிய முப்பரிமாண​த் தொழில்நுட்​பத்தில் கூகுள் மேப்குறுகிய காலத்தில் விற்பனையில் உச்சத்தைத் தொட்டிருக்கும் அப்பிள் சாதனங்களில் கூகுள் மேப்பிற்கென புதிய முப்பரிமாணத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது.

இதன் மூலம் கூகுள் ஏர்த்திலுள்ள முப்பரிமாணப் படங்களை அப்பிள் சாதனங்களின் இயங்குதளமான iOS களில் சிறந்த முறையில் அவதானிக்க முடியும்.

இவற்றுடன் சில வகையான அன்ரோயிட் இயங்குதளங்களைக் கொண்ட சாதனங்களிலும் இம் முப்பரிமாணத் தொழில்நுட்பம் புகுத்தப்படவுள்ளது.

2006ஆம் ஆண்டு கூகுள் மேப் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து அவற்றில் எழுத்துக்கள் மூலமே இடங்கள் குறிப்பிடப்பட்டு வந்தன.

ஆனால் தற்போது அறிமுகப்படுத்தப்படவிருக்கும் தொழில்நுட்பத்தின் மூலம் முப்பரிமாண கட்டிட மொடல்களை அடிப்படையாகக் கொண்டு இடங்களை அறிந்து கொள்ள முடியும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply