அதிகாலையில் கண் விழித்தால் ஸ்லிம் ஆகலாம்

Loading...

அதிகாலையில் கண் விழித்தால் ஸ்லிம் ஆகலாம்அதிகாலையில் கண் விழிப்பவர்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், ஸ்லிம்மாகவும் இருப்பார்கள் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ரோகாம்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மேற்கொண்ட ஆய்வில், அதிகாலையில் எழுபவர்கள் தங்களுக்கான வேலையை சுறுசுறுப்பாக செய்வதோடு தங்கள் குழந்தைகளையும் பள்ளிக்கு விரைவாக அனுப்பிவைப்பார்கள் என்று கூறியுள்ளனர். இரவு ஆந்தைகளைப்போல விடிய விடிய வேலை பார்ப்பவர்கள் மன அழுத்தத்தினாலும், உடல் பருமனுடனும் இருப்பார்கள் என்று கூறுகிறது அந்த ஆய்வு முடிவு. 1,068க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் அவர்களின் உறங்கும் பழக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதிகாலையில் எழுபவர்கள் சராசரியாக காலை 6.58 மணிக்கு எழுந்திருத்தனர். ராக்கோழிகள் எனப்படும் சோம்பேரிகள் காலை நேரத்தை சராசரியாக 8மணி 54 நிமிடத்திற்கு தொடங்குகின்றனர். வார இறுதி கொண்டாட்டம் வார இறுதி நாட்களில் மகிழ்ச்சியுடன் இரவில் அதிக நேரம் பொழுதை கழிக்கும் இளைஞர்கள் காலையில் 7மணி47 நிமிடத்திற்கு எழுந்திப்பதாக தெரிவித்தனர்.அதேசமயம் இரவு ஆந்தைகள் எனப்படும் ராக்கோழி இளைஞர்கள் விடிய விடிய ஆட்டம் போட்டுவிட்டு காலையில் மறுநாள் காலை 10 மணிக்கே கண் விழிக்கின்றனர். அதிகாலையில் சீக்கிரம் கண் விழிப்பவர்கள், தாமதமாக கண்விழிப்பவர்களை விட ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இலேசான உடல்வாகு கொண்டவர்களாகவும் இருப்பதாகவும் இது தொடர்பான ஆய்வு மேற்கொண்ட டாக்டர் ஜார்ஜ் ஹப்பர் டெலிகிராப் ஆங்கில நாளிதழில் தெரிவித்துள்ளார். அதிகாலையில் கண் விழிப்பது சுறுசுறுப்பானது மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட என்று தெரிவிக்கின்றது இந்த ஆய்வு முடிவு.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply