அடை

Loading...

அடை
தேவையானவை:
இட்லி அரிசி (புழுங்கல் அரிசி) – ஒரு கப், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு மூன்றும் சேர்ந்து – ஒரு கப், மிளகாய் வற்றல் – 3.

செய்முறை:
இட்லி அரிசி, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல் ஆகியவற்றை சேர்த்து மெஷினில் கொடுத்து கொரகொரப்பாக அரைத்து வாங்கவும். இதுதான் அடை ரெடி மிக்ஸ்.
அடை செய்யும்போது தேவையான அளவு அடை ரெடி மிக்ஸ் எடுத்துக் கொண்டு, உப்பு சேர்த்துக் கலந்து, தண்ணீர் விட்டு கெட்டி யாக கரைத்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் துண்டுகள், நறுக்கிய வெங்காயம் சேர்த்துக் கலந்து வழக்கம் போல அடை தயார் செய்யவும்.

குறிப்பு:
மாவில் கறிவேப்பிலை, கொத்தமல்லியை கிள்ளிப் போட்டு கலந்தும் செய்யலாம்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply