அகத்திக்கீரை மண்டி

Loading...

அகத்திக்கீரை மண்டி
தேவையானவை:
அகத்திக்கீரை – ஒரு கட்டு, தேங்காய்ப்பால் – அரை கப், சின்ன வெங்காயம் – 6, அரிசி கழுவிய கெட்டித் தண்ணீர் – ஒரு கப், உப்பு – ருசிக்கேற்ப. தாளிக்க: எண்ணெய் – ஒரு டீஸ்பூன், கடுகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2.

செய்முறை:
அகத்திக்கீரையை உருவி, கழுவிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய்விட்டு, கடுகு, சீரகம் தாளித்து, காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போடவும். பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி, கீரையையும் சேர்த்து நன்றாக வதக்கவும். கீரை வதங்கியதும், அரிசி கழுவிய மண்டியை ஊற்றி வேகவிடவும். நன்றாக வெந்ததும் உப்பு சேர்த்து தேங்காய்ப்பால் ஊற்றிக் கிளறி இறக்கவும்.

பலன்கள்:
பார்வைத்திறனை மேம்படுத்தும். பேதியான பின்பும் நாள்பட்ட வியாதிகளுக்குப் பின்பும் குடலில் ஏற்படும் தளர்ச்சியை நீக்கி, நன்மை புரியக்கூடிய உயிரிகளின் (பாக்டீரியா) செயலாற்றலை (ஜீக்ஷீஷீதீவீணீtவீநீ மீயீயீமீநீt) மேம்படுத்தும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply