ஃபட்ஜ்

Loading...

ஃபட்ஜ்
தேவையானவை:
பால், மில்க் பவுடர், க்ரீம், கடலை மாவு – தலா அரை கப், சர்க்கரை – ஒன்றேகால் கப், பாதாம் – பிஸ்தா துண்டுகள் – 2 டீஸ்பூன், நெய் – அரை கப்.


செய்முறை:
ஒரு பாத்திரத்தில் கடலை மாவைப் போட்டு, நெய் விட்டு கலந்து, கட்டி இல்லாது தேய்த்துப் பிசையவும். இதை 5 நிமிடம் ஊறவிடவும். பின்னர், பால் விட்டு கட்டி இல்லாது கலக்கவும். கடாயில் க்ரீம், மில்க் பவுடர் போட்டுக் கலந்து, அடுப்பை குறைவான தீயில் வைத்துக் கிளறவும். கெட்டியாக வெண்ணெய் போன்று வரும் நேரம், கடலை மாவு கலவையை சேர்த்து வாசனை வரும்வரை வறுத்து எடுத்து வைக்கவும். வேறு பாத்திரத்தில் சர்க்கரையை கம்பி பதத்தில் பாகு வைத்து, அதை கடலை மாவு கலவையில் விட்டுக் கிளறவும். கெட்டியானதும், நெய் தடவிய தட்டில் போட்டு, மேலே பாதாம் – பிஸ்தா துண்டுகள் தூவி லேசாக அழுத்திவிடவும். இது கதகதப்பான சூட்டில் இருக்கும்போது துண்டுகள் போட்டால்… அசத்தல் சுவையில் ஃபட்ஜ் ரெடி!

Loading...
Rates : 0
Loading...
VTST BN