Google இற்கு அச்சுறுத்தல் விடுக்கும் ஈரான்! பேசியன் வளைகுடா கூகிள் வரைபடத்தில் இல்லை!

Loading...

Google இற்கு அச்சுறுத்தல் விடுக்கும் ஈரான்! பேசியன் வளைகுடா கூகிள் வரைபடத்தில் இல்லை!பேசிய வளைகுடாவைத் தனது வரைபடத்தில் பதிவுசெய்யாததற்காக உலகின் மிகப்பெரிய இணைய அரக்கனான Google மீது தாம் சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக ஈரான் எச்சரித்துள்ளது.

முன்னரும் ஈரான் இந்த வளைகுடாவை அரேபிய வளைகுடாவென அழைத்ததற்காக அமெரிக்க இராணுவத்தினைச் சாடியிருந்தது.

ஈரானின் எதிரிகளால் மேற்கொள்ளப்படும் நவீன தொழினுட்பத்துடனான அரசியல் விளையாட்டுக்கள் இவையென்றும் அவற்றுடன் இணைந்து ஈரானிற்கெதிராக Google செயற்பட்டுவருகின்றது என்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டார்.

தாம் பொதுவாக ஒவ்வொரு நீர்ப்பகுதிக்கும் பெயரிடுவதில்லையென்றும் அதன் பிரகாரமே இப்பகுதிக்கும் பெயரிடவில்லை என்கின்றது Google. எனினும் இவ்வாறு குறிப்பிடப்படாத நீர்ப்பகுதிகள் எதையும் அவர் கூறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Google இல் சென்று பேசியன் வளைகுடா என்று தேடினால் கிடைப்பது வளைகுடாவின் படமாக இருக்குமேயொழிய அதற்குப் பெயரிடப்பட்டிருக்காது. அதன் அருகிலுள்ள ஓமான் வளைகுடா, அரேபியக் கடல் மற்றும் செங்கடல் என்பன காணப்படும். Google இல் ஓர் இடத்தைக் காட்டவேண்டுமெனில் அவ்விடத்தை A என்ற எழுத்தினால் குறிப்பர். எனினும், அந்த எழுத்தினைப் பார்க்கும்போது அதில் பேசியன் வளைகுடா என்று காணப்படுகின்றதுதான்.

இந்த அலட்சியத்திற்கு எதிரான கருத்துக்கள் ஈரானிற்குள்ளும் உலகெங்கிலுமுள்ள ஈரானியர்களாலும் இணையத்தளங்களில் பல்வேறு வடிவங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.

அராபியர்களால் முன்பொரு காலத்தில் இந்த நீர்ப்பகுதியை அரேபிய வளைகுடா என்று அழைக்கவேண்டுமென்று முறைப்பாடும் செய்யப்பட்டிருந்ததென ஒக்ஸ்போட் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் குறிப்பிட்டார்.

ஈரான் 2006இல் ஒருமுறை பிரித்தானிய வெளியீடான The Economist என்பது இந்நீர்ப்பகுதியை வெறுமனே the Gulf என்று குறிப்பிட்டதற்காகவும் எதிஏப்புத் தெரிவித்திருந்தது.

எனினும், சர்ச்சைக்குரிய பகுதிகள் பற்றி Google எதுவும் குறிப்பிடாமல் இருப்பதன்மூலம் தன்னைப் பாதுகாத்துக்கொள்கின்றது என்று அந்தப் பேராசரியர் மேலும் விளக்கினார்.

இதுபோலவே ஆசியப் பகுதியிலுள்ள மியான்மார் என்று பெயர்பெற்ற நாட்டை அமெரிக்க அரசு இன்னமும் பர்மா என்றே அழைத்துவருவதும் இதேபோல கம்பூச்சியா என்று அழைக்காமல் கம்போடியா என்று அழைப்பதும் வழமை.

இஸ்ரேலின் மேற்குக் கரையினைச் சிலர் யூடியா மற்றும் சமாரியா என்றும் வட அயர்லாந்தில் ஒரு பகுதியை Derry என்று அழைப்பதா அல்லது Londonderry என்று அழைப்பதா என்று தேசியவாதிகளுக்கும் ஐக்கியவாதிகளுக்குமிடையில் பல வருடங்களாகத் தர்க்கமும் இடம்பெற்றுவந்தது. இதேபோல ஆர்ஜென்ரீனாவும் லத்தீன் அமெரிக்காவும் போக்லாந்தினை Malvinas என்கின்றனர்.

இவ்வாறான பெயரிடுகைகளெல்லாம் ஒருவர் யாருடன் தொடர்பு வைத்துள்ளார் என்பதில்தான் உள்ளது என்று விளக்கினார் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகப் பேராசிரியர்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply