Google இனால் தகவல்கள் திருடப்படுகின்றன – திடுக்கிடும் உண்மை!

Loading...

Google இனால் தகவல்கள் திருடப்படுகின்றன – திடுக்கிடும் உண்மை!தென்மேற்கு இங்கிலாந்திலுள்ள பிரிஸ்ரலில் வீதி வரைபடத்தினைப் படமெடுத்தது Google. ஆனாலும் இது எப்போதுமே தான் தனிப்பட்ட தகவல்களைச் சேகரிப்பதில்லையென்றே மறுத்துவருகின்றது.

பிரித்தானியாவின் மில்லியன்கணக்கான வீட்டுக் கணினிகளின் தகவல்கள் களவாடப்பட்டுள்ளனவென்ற குற்றச்சாட்டினை இது எதிர்கொண்டுவருகின்றது.

தரவுப் பாதுகாப்பு அமைப்பின் தகவல் அதிகாரி இணையத்தள அரக்கனான Google இன் வீதிப் பார்வைக் கார்களழன் பணியைப் பரிசோதிப்பாரென எதிர்பார்க்கப்படுகின்றது.

வீதிப் பார்வையைப் பதிவு செய்யும் கார்கள் மின்னஞ்சல்கள், செய்திகள், நிழற்படங்கள் மற்றும் ஆவணங்களைத் தனது கார்களிலுள்ள wi-fi உணரியின் வலையமைப்புகளின்மூலம் அவர்கள் ஒவ்வொரு பிரித்தானிய வீதிகளைப் படமெடுக்கும்போதும் பெற்றுவருகின்றனர் எனப்படுகின்றது.

2 வருடங்களின் முன்னர்தான் கூகிளினால் தனிப்பட்ட தரவுகளின் சிறு பிரிவுகள் திருடப்பட்டிருந்ததை முதன்முதலாக Google ஏற்றுக்கொண்டிருந்தது. அதனை ஒரு “தவறுதல்” என்றே அது அப்போது கூறியிருந்தது.

தற்போது இதன் முழுமையான செயற்பாடொன்று வெளிவந்து குற்றச்சாட்டுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பிரித்தானியாவிலுள்ள 4இல் ஒரு வீட்டு வலையமைப்பானது பாதுகாப்பற்றதாகவே உள்ளது. இதற்குக் கடவுச்சொற்கள் இல்லாததால் ஒருவரின் தகவல்களைச் சேகரிப்பதும் தடுக்கப்படாது.

Google ஆனது தகவல்களை இலகுவாகப் பெற்றுக்கொண்டு அவற்றைப் பணச் சம்பாதிப்பதற்குப் பின்னர் பயன்படுத்தப்போகின்றதெனத் தொழினுட்ப இணையத்தளங்களும் blogger களும் கூறியுள்ளனர்.

பிரித்தானியாவின் தகவல் அமைப்பு ஏனைய நாடுகளான ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் செக் குடியரசு செய்ததைக்கூடச் செய்யத் துணியாமல் அலட்சியமாக உள்ளதாக விமர்சிக்கப்படுகின்றது.

ஜேர்மனியில் வீதிப்படமெடுப்பு ஹம்பேர்க்கின் எதிர்ப்பார்ப்பாட்டத்தினால் நிறுத்தப்பட்டதுடன் குற்ற விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. பிரான்சிலும் 87,000 பவுண் தண்டப்பணம் Google இற்கு விதிக்கப்பட்டிருந்தது. இது எப்பொதுமில்லாதளவு பாரியளவு தொகையாக இருந்தது.

செக் குடியரசிலுங்கூட 2010 செப்ரெம்பரில் இந்தப் படமெடுப்பு தடைசெய்யப்பட்டது.

எனினும் Google இன் பேச்சாளர் குறிப்பிடுகையில் இந்தத் திட்டத்தி்ற்குப் பொறுப்பானவர்கள் இத்தகவல்களை ஒருபோதும் பணம் சம்பாதிப்பதற்குப் பயன்படுத்தத் தீர்மானிக்கவில்லை என்றும் அவ்வாறான எந்தவொரு உற்பத்திகளையும் சேவைகளையும் ஒருபோதும் Google பயன்படுத்தியிருக்கவுமில்லையென்று கூறினார்.

இந்த மாத ஆரம்பப் பகுதியில்தான் Google தகவல் தொழிநுட்ப அமைப்பினால் 15,000 பவுண்கள் தண்டப்பணம் செலுத்தப் பணிக்கப்பட்டது.

எனினும் அரசினால் Google இற்கெதிராகப் போதுமான விசாரணைகள் இடம்பெறவில்லை என்பதே இங்கு அனைவராலும் குறிப்பிடப்படும் முக்கிய விடயமாக உள்ளது.

Loading...
Rates : 0
VTST BN