Facebook கைத்தொலைபேசி e-commerce மென்பொருள் Karma வை வாங்குகின்றது! | Tamil Serial Today Org

Facebook கைத்தொலைபேசி e-commerce மென்பொருள் Karma வை வாங்குகின்றது!

Facebook கைத்தொலைபேசி e-commerce மென்பொருள் Karma வை வாங்குகின்றது!பொதுநிறுவனமாக ஆரம்பித்த மறுநாளே புதிய கொள்வனவினை Facebook செய்துள்ளது.

கையடக்கத் தொலைபேசியின் பரிசுப் பொருட்கள் கொடுக்கும் Karma மென்பொருள் நிறுவனம் தம்மைFacebook நிறுவனம் கொள்வனவு செய்துவிட்டது என்று வெள்ளிக்கிழமை அறிவித்தது.

Karma தனது பயன்பாட்டாளர்களைக் கைத்தொலைபேசி மூலம் பரிசுப்பொருட்களை வாங்க உதவியது. வாடிக்கையாளர்களுக்கு அந்தப் பரிசுபற்றிய செய்தியொன்று கிடைக்கும். இந்தச் செய்தி, அவர்கள் விரும்பினால் அப்பொருளை மாற்றிக்கொள்ளக்கூடிய இணையத்தளமொன்றிற்கு அழைத்துச்செல்வதோடு தமது முகவரியையும் பதிந்துகொள்ள வழிகாட்டும்.

இந்த மென்பொருள் 2011இல் வெளியிடப்பட்டது. எடுத்துக்காட்டாக, இது Facebook இன் பக்கங்களிலிருந்து பயனாளர்களை அவர்களின் நண்பர்களின் பிறந்தநாட்களைச் சுட்டிக்காட்ட வெளியே இழுத்துச்சென்றுவந்தது. இந்த மென்பொருளை வாங்கிய பின்னர் இதன் பயன்பாடாக தனது செயற்பாடுகளை அது நினைவுபடுத்தும் செயலைச் செய்யும்.

இந்நகர்வினால் Facebook இனால் தனது கைத்தொலைபேசி உதவிகளை விரிவுபடுத்தமுடிகின்றது. இது கணினியைவிடவும் குறைந்த செலவையே இங்கு தருகின்றது. இந்த மென்பொருளின் வர்த்தக அமைப்புகள் அப்பகுதியில் Facebook திட்டங்களை விரிவுபடுத்தவும் உதவிசெய்கின்றது.

Loading...
Rates : 0
VTST BN