ஸ்வீட் ரைஸ்

Loading...

ஸ்வீட் ரைஸ்

தேவையானவை:
பாஸ்மதி அரிசி & ஒரு கப், குங்குமப்பூ & சிறிது, சர்க்கரை & ஒரு கப், முந்திரி, பிஸ்தா, பாதாம், திராட்சை & 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் & அரை டீஸ்பூன், பட்டை & ஒரு சிறிய துண்டு, கிராம்பு & 3, நெய் & தேவையான அளவு, கேசரி பவுடர் & ஒரு சிட்டிகை, பால் & சிறிதளவு.

செய்முறை:
பாலில் குங்குமப்பூ, கேசரிபவுடர் இரண்டையும் கரைத்துக் கொள்ளவும். அரிசியை உதிரியாக வடித்து ஆறவிடவும். கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் கிராம்பு, பட்டை, ஏலக்காய்த்தூள், திராட்சை, பருப்பு துண்டுகளைப் போட்டு வறுத்துக் கொள்ளவும். ஆற வைத்துள்ள சாதத்தை போட்டு(சாதம் உடைந்து விடாத அளவு) பாலில் ஊறிய கேசரிபவுடர், குங்குமப்பூவையும் சேர்த்து லேசாக கிளறவும். ஆறிய பிறகு சர்க்கரை சேர்த்து கலந்து பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply