ஸ்வீட் அண்ட் சோர் ஆப்பிள் ஜாம்

Loading...

ஸ்வீட் அண்ட் சோர் ஆப்பிள் ஜாம்
தேவையானவை:
பழுத்த ஆப்பிள் (பெரியது) – ஒன்று, சர்க்கரை – கால் கிலோ, எலுமிச்சைச் சாறு – 2 டேபிள்ஸ்பூன்


செய்முறை:
ஆப்பிளை தோல் சீவி, நடு பாகத்தில் இருக்கும் விதையை நீக்கி சிறு துண்டுகளாக்கி, அளவாக தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து, 2 விசில் வரும் வரை வேகவிட்டு எடுக்கவும். வெந்த ஆப்பிளை நன்கு மசித்து அடிகனமான பாத்திரத்தில் போட்டு சர்க்கரை சேர்த்து, அடுப்பை குறைந்த தீயில் வைத்து, கிளறிக்கொண்டே இருக்கவும். கலவை நன்கு வெந்து சுருள வரும்போது இறக்கி, அத்துடன் எலுமிச்சைச் சாறு கலந்து, ஆறிய பிறகு காற்றுப்புகாத கன்டெய்னரில் சேமித்து வைக்கவும்.
பயணத்தின்போது சப்பாத்தி, பிரெட், இட்லிக்குத் தொட்டுக்கொள்ளலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply