ஸ்கிப்பிங் பயிற்சியின் பயன்கள் !!

Loading...

ஸ்கிப்பிங் பயிற்சியின் பயன்கள் !!

இன்றைய நிலையில் பெரும்பாலான மக்களின் பிரச்சனைகளுள் ஒன்று உடல் பருமன்.

உடல் பருமன் பிரச்சனையால் தவிக்கும் மக்கள் தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, தொப்பை பிரச்சனையும் படிப்படியாக குறையும்.

தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி மேற்கொள்வதால், சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும், உடலுக்குப் புத்துணர்வையும் தருகிறது.

உடலில் உள்ள தேவையற்ற எடை குறைகிறது.

உடலின் உள் உறுப்புகளும், நரம்புகளும் தக்க பயிற்சி கிடைப்பதால் அவற்றின் செயல்பாடுகள் சீராகின்றன.

மனக் கவலை, மன அழுத்தம், எதிலும் நாட்டமின்மை போன்ற உள்ளக் கோளாறுகள் நீங்குகின்றன.

உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், இதயத்திற்கும், நுரையீரலுக்கும் வலுவூட்டம் கொடுக்கிறது.

கை, கால், தொடைப் பகுதி தசைகள் அதிக சக்தி பெறுகின்றன. மூட்டு வலி, கணுக்கால் வலி நீங்குகிறது.

இடுப்பு வலி உள்ளவர்கள் தினமும் ஸ்கிப்பிங் பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் இடுப்பு வலி குறைவதுடன், முதுகெலும்பின் எலும்பு முடிச்சுகள் பலம் பெறுகின்றன.

ஆழ்ந்த உறக்கத்திற்கு ஸ்கிப்பிங் அருமருந்தாகும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply