வெந்தயம் எனும் சிறந்த டாக்டர்

Loading...

வெந்தயம் எனும் சிறந்த டாக்டர்வெந்தயம் ஒன்றும் சாதாரண கசப்பு பொருள் அல்ல; அருமருந்து.

நற்குணங்கள்:
வெந்தயத்தை வறுத்து பொடி செய்து, 1 டம்ளர் நீரில் ஊற வைத்து உட்கொள்ள வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், சுரம், உட்சூடு, வெள்ளை, சீதக்கழிச்சல் முதலியவைகள் போகும். 17 கிராம் வெந்தயத்தை, 340 கிராம் பச்சரிசியுடன் சேர்த்து சமைத்து,
உப்பிட்டுச் சாப்பிட, குருதி பெருகும்.
கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும். வெந்தயத்தை ஒரு கைப்பிடியளவு எடுத்து ஊற வைத்து, தலைக்கு குளித்து வந்தால், முடி வளரும். முடி உதிர்வதை தடுக்கும்.
வெந்தயத்தை வறுத்து, இத்துடன் வறுத்த கோதுமையைச் சேர்த்து, காப்பிக்குப் பதிலாக வழங்கலாம்.
இதனால் உடல் வெப்பம் நீங்கும்.

வெந்தய லேகியம்:
வெந்தயம், மிளகு, திப்பிலி, பெருங்காயம் இவற்றை சமஅளவு எடுத்து உலர்த்தி நன்றாக வறுத்துப் பொடி செய்து சர்க்கரைப் பாகில் போட்டு லேகியமாகச் செய்து சாப்பிட சீதக்கழிச்சல், வெள்ளை, மேல் எரிச்சல், குருதியழல், தலைகனம், எலும்பைப் பற்றிய சுரம் தீரும். நீர் வேட்கை, இளைப்பு நோய், கொடிய இருமல் ஆகியவற்றை விலக்கும்; ஆண்மை பெருகும்.
வெந்தயம், கடுகு, பெருங்காயம், கறிமஞ்சள் ஆகியவற்றை, சமபாகம் எடுத்து நெய் விட்டு வறுத்து, பொடி செய்து சோற்றுடன் கலந்துண்டால் வயிற்று வலி, பொருமல் குறையும்.
வெந்தயத்தை, சீமை அத்திப்பழம் சேர்த்து அரைத்து, கட்டிகளின் மீது பற்றுப்போட்டால் அவை உடையும். படைகள் மீது பூசினால் மாறும். வெந்தயத்தை, சீமைப்புளி, அத்திப்பழம், திராட்சை ஆகியவற்றை ஒரே எடையாகச் சேர்த்து, தேன் கலந்து சாப்பிட்டால் இதயவலி, மூச்சடைப்பு இவை போகும். வெந்தயத்தை வேக வைத்து தேன் விட்டு உட்கொண்டால், மலம் எளிதாக வெளியேறும்.

Loading...
Rates : 0
VTST BN