வெந்தயக்கீரை சாம்பார் | Tamil Serial Today Org

வெந்தயக்கீரை சாம்பார்

வெந்தயக்கீரை சாம்பார்
தேவையானவை:
வெந்தயக்கீரை – மூன்று கட்டு, புளி – ஒரு எலுமிச்சம்பழ அளவு, சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், துவரம்பருப்பு – ஒரு கப், கடுகு, வெந்தயம் – தலா அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
வெந்தயக் கீரையை ஆய்ந்து, நன்கு அலசி, எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். துவரம்பருப்பை குழைய வேக வைக்கவும். புளியை 250 மில்லி தண்ணீர் விட்டு கரைத்து, உப்பு, சாம்பார் பொடி, வதக்கிய வெந்தயக்கீரை சேர்த்துக் கொதிக்கவிடவும். இதனுடன் வேகவைத்த பருப்பு சேர்த்து… கடுகு, வெந்தயம் தாளித்துக் கொட்டி இறக்கவும்.
குறிப்பு: வெந்தயக் கீரை உடலுக்கு குளிர்ச்சி தரும்.

Loading...
Rates : 0
VTST BN