வெண்டைக்காய் மோர்க்குழம்பு

Loading...

வெண்டைக்காய் மோர்க்குழம்பு
தேவையானவை:
வெண்டைக்காய் – 20, அதிக புளிப்பு இல்லாத மோர் – 500 மில்லி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு – தலா 2 டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, பச்சை மிளகாய் – ஒன்று, தேங்காய் துருவல் – ஒரு கப், அரிசி – ஒரு டீஸ்பூன், கடுகு, வெந்தயம் – தலா அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
வெண்டைக்காய்களை காம்பு நீக்கி இரு துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வதக்கி தனியே வைக்கவும். அரிசி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், தேங்காய் துருவல் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து, மிக்ஸியில் அரைத்து, மோருடன் கலந்து, உப்பு போட்டுக் கலக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, வெந்தயம் தாளித்து… மோர் கலவையை சேர்த்து, வதக்கிய வெண்டைக்காய் துண்டுகளையும் சேர்த்து, கொதிக்கவிட்டு இறக்கவும்.

குறிப்பு:
இதேமுறையில் கத்திரிக்காயிலும் மோர்க்குழம்பு தயாரிக்கலாம்

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply