வெஜிடபிள் புலாவ்

Loading...

வெஜிடபிள் புலாவ்
தேவையானவை:
பாசுமதி அரிசி – 250 கிராம், பீன்ஸ் – 6, குடமிளகாய் (சிறியது) – ஒன்று, உரித்த பச்சைப் பட்டாணி – ஒரு கப், கேரட், பெரிய வெங்காயம் – தலா ஒன்று, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, பச்சை மிளகாய் – 2, நெய் – 100 மில்லி, வறுத்த முந்திரி – 10, உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
ஒரு பங்கு அரிசிக்கு இரண்டு பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து, இரண்டு விசில் விட்டு இறக்கவும். பீன்ஸ், குடமிளகாய், கேரட், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி, பச்சைப் பட்டாணி சேர்த்து நெய் விட்டு வதக்கி, உப்பு போட்டு, சாதத்துடன் சேர்த்து நன்கு கலக்கவும். இதனுடன், வறுத்த முந்திரி, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்துக் கலந்தால்… வெஜிடபிள் புலாவ் ரெடி!
குறிப்பு: பனீர் பொரித்து சேர்க்கலாம். இதற்கு தக்காளி, வெங்காயம், வெள்ளரிக்காய் ராய்தா சூப்பர் காம்பி னேஷன்!

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply