விரைவில் சாலையை கலக்கவரும் கூகுளின் Self-Driving Car

Loading...

விரைவில் சாலையை கலக்கவரும் கூகுளின் Self-Driving Carகூகுள் தயாரித்துள்ள ஓட்டுனர் இல்லாமல் தானாகவே இயங்கும் கார்கள் விரைவில் விற்பனைக்கு வரலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஓட்டுனர் இல்லாமல் தானாகவே இயங்கும் கார்களை தயாரிக்கும் முயற்சியில் மெர்ஸிண்டிஸ், பி.எம்.டபிள்யூ போன்ற பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் கூகுள் நிறுவனம் ஒருபடி முன்சென்று வரும் 2020ஆம் ஆண்டுக்கு இந்த வகை கார்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இந்நிலையில் கூகுளின் தானாக இயங்கும் கார்களுக்கு மனித ஓட்டுனர்களுக்கு வழங்கும் அங்கிகாரத்தை அளிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்காவின் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் கூகுளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், வாகனத்தில் உள்ளவர்களில் ஒருவரும் வாகனத்தை ஓட்டவில்லை என்றால் பின்னர் வாகனத்தை ஓட்டுவது எது என்பது குறித்து அடையாளப்படுத்துவது முக்கியம்.

ஆனால் தற்போதைய தானியங்கி கார் தொடர்பான விடயத்தில் தானாக இயங்கும் அமைப்பு தான் வாகனத்தை இயக்குறது என்று தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் மனிதர்களை மட்டுமே ஓட்டுனர்களாக இந்த ஆணையம் அங்கிகரித்து வந்தது. இந்நிலையில் தற்போது, கூகுளின் தானாக இயங்கும் கார்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து மத்திய மோட்டார் வாகன பாதுகாப்பு நியமங்கள் தொடர்பான சோதனையில் தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகள் கூகுள் காருக்கு கிடைத்துள்ளது.

இதன் மூலம் இந்த கார்கள் விரைவில் சாலைகளில் இயக்கப்படுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply