விண்வெளிக்குச் செல்லும் SpaceX இன் முதலாவது தனியார் சரக்குக் கலம்

Loading...

விண்வெளிக்குச் செல்லும் SpaceX இன் முதலாவது தனியார் சரக்குக் கலம்கலிபோர்ணியாவின் SpaceX நிறுவனம் தனது முதலாவது சரக்குக் கலத்தினை Falcon 9 ஏவுகணையிலிருந்து ஏவுவதன்மூலம் வரலாற்றில் தடம் பதிக்கின்றது. இந்த ஆளற்ற சரக்குக் கலம் Cape Canaveral வான்படைத் தளத்திலுள்ள தளம் 40 இலிருந்து ஏவப்படதவுள்ளது.

இந்தத் தனியார் நிறுவனத்தினால் இத்தகையதொரு சேவை செய்யப்படுவது இதுதான் முதல் தடவையாகும்.

இவ்வாறான வழமையான பணிகளை அரச விண்வெளி நிறுவனங்களான நாசா மற்றும் ஈசா (Esa) போன்றவையே செய்துவந்தன.

இவ்வாறான சேவைகளை வழமையாக ஐரோப்பா, ரஸ்யா, அமெரிக்கா மற்றும் யப்பான் ஆகிய நாடுகள் அல்லது கூட்டாக இணைந்த நாடுகளே மேற்கொண்டுவந்தன. இதனால் தற்போது இவ்வாறான சந்தர்ப்பம் தமக்குக் கிடைத்ததையட்டுப் பெருமகிழ்வு கொள்வதாக அதன் தலைவர் Gwynne Shotwell தெரிவித்தார்.

இவ்வாறான உணவு மற்றும் உபகரணங்களினைக் கொண்டுசெல்வதற்காக SpaceX மற்றும் Orbital Sciences Corp ஆகிய இரு தனியார் நிறுவனங்களுக்கும் பில்லியன் டொலர் ஒப்பந்தப்படி வழங்கப்பட்டிருந்தன. இதில் Orbital Sciences Corp நிறுவனம் தனது முதலாவது பயணத்தை இவ்வருட இறுதியில் தனது Antares ஏவுகணை மூலம் Cygnus கலத்தினை அனுப்பவுள்ளது.

இந்தப் புதிய நகர்வானது அமெரிக்க விண்வெளி நிறுவனத்தினை புதிய முயற்சிகளில் இறக்கி புவிக்கு அப்பால் சென்று விண்கற்கள் மற்றும் செவ்வாய்க் கிரகங்களை ஆய்வுசெய்ய இடங்கொடுக்கும்.

இந்த விண்கலமானது 10 நிமிடங்கள்வரை சரக்குக் கலத்துடன் இருக்கும். அந்த நேரத்திற்குள் புவியிலிருந்து 300கி.மீ. தூரத்திற்குள் அக்கலம் சென்றிருக்கும் நிலையில் அது பிரிக்கப்படும். இதன்பின்னர் இந்தக் கலம் சூரியக் கலங்களைப் பரப்பித் தனது வழிகாட்டித் தொகுதிகள் சரியாக உள்ளனவா என்று பார்த்துவிட்டுத் தனது thrusters களை விண்வெளி நிலையத்தைத் தேடி அனுப்பும்.

ரஸ்ய மற்றும் ஐரோப்பிய இயந்திரக் கலங்களைப் போல ISS இலுள்ள தரித்துநிற்கும் தளங்களிற்கு இது செல்லாது. விண்வெளி நிலையத்தின் தளத்திற்கு 10மீ. கீழாக நகரும். இது பின்னர் விண்வெளி வீரர்களால் இயக்கப்படும் ஓர் இயந்திரக் கையினால் இழுத்தெடுக்கப்படும்.

இது உண்மையில் ஒரு பரிசோதனைப் பறப்பாகும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply