விண்டோஸ் 7ன் Start Menuஐ விண்டோஸ் 8ல் பெறுவதற்கு

Loading...

விண்டோஸ் 7ன் Start Menuஐ விண்டோஸ் 8ல் பெறுவதற்குகணனி உலகின் அரசனாகத் திகழும் மைக்ரோசொப்ட் நிறுவனமானது தனது விண்டோஸ் இயங்குதளத்தின் புதிய பதிப்பான விண்டோஸ் 8 ஐ அண்மையில் வெளியிட்டிருந்தது. இது முற்றுமுழுதாக முன்னைய பதிப்பின் பயனர் இடைமுகத்திலிருந்து வேறுபட்டதாக காணப்படுகின்றது.

மேலும் விண்டோஸ் 7ல் Task bar காணப்படும் பகுதியில் Charms Bar எனும் புதிய அம்சம் காணப்படுகின்றது. இதனை உங்களுக்கு கையாளக் கடினமாக இருப்பின் நீங்கள் பழைய பதிப்பான விண்டோஸ் 7ன் Start Menu ஐ வரவழைத்து பயன்படுத்த முடியும். இதற்கு கீழ்காணப்படும் படிமுறைகளை பின்பற்றுக.

1. Win+r ஆகிய விசைகளை அழுத்தியாவாறு Enter விசையை அழுத்தவும்.

2.தோன்றும் Registry Settings விண்டோவில் HKEY_CURRENT_USERSoftwareMicrosoftWindowsCurrentVersion என்பதை தெரிவு செய்யவும்.

3. பின்பு விண்டோவின் வலது பகுதியில் காணப்படும் RPEnabled என்பதை double click செய்க.

4. தொடர்ந்து தோன்றும் DWORD விண்டோவில் Data Value ஐ 0 என டைப் செய்து OK என்பதை கிளிக் செய்க.

இப்போது உங்கள் கணினியை Restart செய்யவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply