வாழைப்பழ பணியாரம்/valaipalam paniyaram

Loading...

வாழைப்பழ பணியாரம்


தேவையான பொருள்கள்

கோதுமை மாவு – அரை கப்
வாழைப்பழம்- 2
தேங்காய் துருவல் – அரை கப்
துருவிய கருப்பட்டி – இனிப்புக்கேற்ப
ஏலக்காய்தூள் – ஒரு சிட்டிகை.


செய்முறை :

கோதுமை மாவை நன்றாக கரைத்து கொள்ளவும்.வாழைப்பழத்தை தோல் உரித்து நன்றாகப் பிசைந்து, அதில் துருவிய தேங்காய், துருவிய வெல்லம், ஏலத்தூள் சேர்த்து நன்றாக கலந்து அதை கரைத்த கோதுமை மாவு கலவையில் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

கலவை சற்று கெட்டியாக இருக்கும் படி கரைத்து கொள்ளவும்.

குழிப்பணியார கல்லை அடுப்பில் வைத்து நன்றாக சூடானதும் மிதமான தீயில் வைத்து ஒவ்வொரு குழியிலும் அரை கரண்டி மாவை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

Loading...
Rates : 0
VTST BN