“வாழைத் தண்டு”

Loading...

“வாழைத் தண்டு”வாழைத் தண்டில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, ஆகிய தாதுப் பொருட்கள், வைட்டமின் பி,சி ஆகியவை உள்ளன. சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் கல் அடைப்பைக் கரைக்கும். வாழைத் தண்டை சிறு துண்டுகளாக நறுக்கி நீரில் கொதிக்க வைத்து அதனுடன் மிளகு, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து சூப் செய்து சாப்பிட்டால் சிறுநீரக கல் கரையும். வாழைத்தண்டு சாறை கொதிக்க வைக்காமல் அருந்துவது தவறு. விஷக்கடி பாதிப்பு உள்ளவர்கள் வாழைத் தண்டு சாறு எடுத்து குடித்தால் விஷ முறிவு உண்டாகும். வாழைத்தண்டு – 4 அங்குலம் வெள்ளைப் பூண்டு – 3 இதழ் சின்ன வெங்காயம் – 4 சீரகம் – 1 தேக்கரண்டி கொத்தமல்லி, கறிவேப்பிலை, தேவையான அளவு எடுத்து ஒன்றாகச் சேர்த்து சூப் செய்து அருந்தினால் தேவையற்ற உப்பு, கொழுப்புகள் கரையும். கண் பார்வை நரம்புகளில் தேங்கி நிற்கும் உப்புப் படிவங்கள் நீக்கிப் பார்வையை தெளிவடையச் செய்யும். வாழைத்தண்டு சாறு நரம்பு மண்டலத்தைத் தூண்டி சுறுசுறுப்பு அடையச் செய்யும். பித்தத்தைக் குறைக்கும். மாதம் ஒருமுறை வாழைத்தண்டு சூப் செய்து அருந்துவது நல்லது. வயது முதிர்ந்த ஆண் பெண் இருபாலருக்கும் மூட்டு வீக்கம், மூட்டு வலி வந்து கை கால்கள் வீங்கி இருந்தால் வாழைத்தண்டு சாறு மிகுந்த பயனளிக்கும். இந்த மருத்தை அகத்தியர் ஆரோக்கிய வாழ்க்கைக்கு அற்புத மருந்து என்று ஆச்சரியம் 1500 நூலில் தெளிவாக விளக்கியுள்ளார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply