வாழைத்தண்டு மோர்க்கூட்டு

Loading...

வாழைத்தண்டு மோர்க்கூட்டு
தேவையானவை:
வாழைத்தண்டு – ஒரு துண்டு, புளிப்பு இல்லாத தயிர் – 500 மில்லி, பச்சை மிளகாய் – ஒன்று, தேங்காய் துருவல் – ஒரு கப், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
வாழைத்தண்டை வில்லைகளாக நறுக்கி, நார் நீக்கி, பொடியாக நறுக்கி, உப்பு சேர்த்து வேகவிடவும். தேங்காய் துருவல், பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து வாழைத்தண்டுடன் சேர்க்கவும். அதில் தயிர் விட்டு நன்கு கலக்கி… கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சேர்த்து உடனே இறக்கவும்.

குறிப்பு:
பித்தப்பையில் உள்ள கற்களை கரைக்க வாழைத்தண்டு உதவும். நமக்கு அவசியம் தேவைப்படும் நார்ச்சத்து வாழைத்தண்டில் இருப்பதால், வாரம் ஒரு முறை இதை உணவில் சேர்க்கலாம்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply