வாழைத்தண்டு புளிப்பச்சடி

Loading...

வாழைத்தண்டு புளிப்பச்சடி
தேவையானவை:
வாழைத்தண்டு – ஒரு பெரிய துண்டு, புளி – எலுமிச்சம் பழ அளவு, பொடித்த வெல்லம் – 50 கிராம், பச்சை மிளகாய் – ஒன்று, தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன், மோர் – சிறிதளவு, கடுகு – கால் டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
வாழைத்தண்டை மேல் தோல் சீவி, வில்லை வடிவமாக நறுக்கி நாரை நீக்கிப் பொடியாக நறுக்கவும். தண்ணீரில் சிறிது மோர் ஊற்றி நறுக்கிய வாழைத்தண்டைப் போட்டு வைக்கவும். புளியைக் கரைத்து, நறுக்கிய வாழைத்தண்டை எடுத்து அதனுடன் சேர்த்து, உப்பு போட்டு வேக வைக்கவும். அதில் தேங்காய் துருவல், பச்சை மிளகாயை அரைத்து சேர்க்கவும். பிறகு, வெல்லம் சேர்த்து கொதிக்க வைத்து, கடுகு தாளித்து இறக்கவும்.


குறிப்பு:
வாழைத்தண்டு பித்தப்பையில் கல் சேராமல் தடுக்கும். நார்ச்சத்து உடையது. ஜூஸ் செய்தும் குடிக் கலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply