வாழைத்தண்டு பச்சடி! பச்சடிகள் பலவிதம்!

Loading...

வாழைத்தண்டு பச்சடி! பச்சடிகள் பலவிதம்!வாழைத்தண்டு பச்சடி!
food image தேவையானவை:
1. வாழைத்தண்டு (நாரெடுத்து பொடியாக நறுக்கியது) – 1 கப்
2. தயிர் – 2 கப்
3. உப்பு
4. மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
5. வெங்காயம் – 1/2 (பொடியாக நறுக்கியது)
6. தக்காளி – 4 துண்டு
7. பச்சை மிளகாய் – 2
8. கருவேப்பிலை
9. எண்ணெய், கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு – தாளிக்க
செய்முறை:
வாழைத்தண்டில் உப்பு, தயிர், மஞ்சள் தூள் கலந்து ஊற வைக்கவும். (1/2 மணி நேரம் போதும்.)
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து, கடலைபருப்பு போட்டு தாளிக்கவும்.
இதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். (லேசா வதக்கினா போதும், ரொம்ப சிவக்க வதக்க வேண்டாம். விரும்பினால் இஞ்சி சிறிது தட்டி வெங்காயத்துடன் வதக்கவும்.)
பின் தக்காளி, கருவேப்பிலை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, ஊற வைத்த வாழைத்தண்டில் சேர்த்து நன்றாக கலக்கவும். (கலந்த பின் அடுப்பில் வைக்க வேண்டியதில்லை)
இது சூடானா சாதத்தில் கலந்து சாப்பிட ருசியாக இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply