வாழைக்காய் சின்ன வெங்காயம் கறி

Loading...

வாழைக்காய்  சின்ன வெங்காயம் கறி
தேவையானவை:
முற்றிய வாழைக் காய் – ஒன்று, சின்ன வெங்காயம் – 12, பூண்டு – 8 பல், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், குழம்பு மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், தக்காளி – ஒன்று, தேங் காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், பெருஞ்சீரகம் – ஒரு டீஸ்பூன், முந்திரி – 4, கடுகு – ஒரு டீஸ்பூன், கறிவேப் பிலை, கொத்தமல்லித் தழை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு


செய்முறை:
வாழைக்காயை தோல் சீவி, சதுர துண்டுகளாக நறுக்கவும். சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். தேங்காய் துருவல், முந்திரி, பெருஞ்சீரகத்தை சேர்த்து மையாக அரைக்கவும்.
மண் சட்டி அல்லது அடி கனமான வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளிக்கவும். பிறகு, சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி, கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கி… வாழைக்காயைச் சேர்த்து, உப்பு, மஞ்சள்தூள், குழம்பு மிளகாய்த்தூள் போட்டு கொஞ்சமாக நீர் விட்டு மூடி வைக்கவும். 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து… அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து, நன்கு சிவக்க வறுத்து, கொத்தமல்லித் தழையைத் தூவி பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply