வயோதிகத்தை விரட்டி இளமையைத் தரும் கேரட்!

Loading...

வயோதிகத்தை விரட்டி இளமையைத் தரும் கேரட்!சிவப்பும் ஆரஞ்சும் கலந்து மின்னும் கேரட் உடலுக்கு வேகத்தை தருவதோடு உடற்சக்தியை தருவதில் காய்கறிகளின் முன்னோடியாகத் திகழ்கிறது. கண்களுக்கும் வயிற்றுக்கும் நெருங்கிய நண்பனாக திகழும் கேரட்டின் அழகு பலன்களை அறிந்து கொள்வோம்.

* கண்களை பாதுகாப்பதில் கேரட்டுக்கு நிகர் கேரட்தான். கேரட்டை தண்ணீர் சேர்க்காமல் நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள். இதன் ஜுஸை அப்படியே `ஐஸ் க்யூப் டிரே’யில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் வைத்துவிடுகங்கள். வெயில் காலத்தில் இந்த க்யூபை கண்களில் மேல் வைத்து ஒற்றி எடுங்கள். மழைக் காலங்களில் ஒரு மஸ்லின் துணியில் க்யூபைப் போட்டு, கண்களைச் சுற்றி ஒற்றி எடுக்கலாம். இதனால் கண்கள் பிரகாசமாக ஜொலிக்கும்.

* ஆப்பிள் போன்று இருந்த கன்னம் வறண்டு விட்டதே என்று கவலைப்படுகிறீர்களா… 3 துண்டு கேரட்டில் 2 டீஸ்பூன் பால் சேர்த்து அம்மியில் விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை முகத்தில் பூசி, உலர்ந்ததும் கழுவுங்கள். கேரட் சருமத்துக்கு நிறம் தரும் பால் மினுமினுப்பைக் கூட்டும்.

* வயோதிகத்தை விரட்டி இளமையைத் தருகிறது கேரட். ஒரு கேரட்டைத் தோலுடன் நறுக்கி, 5 பாதாம் பருப்பை சிறிது தண்ணீரில் ஊற வைத்து, இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை முகம் முதல் பாதம் வரை பூசி, அரை மணி நேரம் கழித்துக் கழுவுங்கள்.

இதை 15 நாட்களுக்கு ஒரு முறை செய்து வர, தொய்வடைந்த தோல் கம்பீரமாகும். பாதாம் தோலுக்குப் பளபளப்பை தரும். கேரட் வெயிலால் வரும் கருமையைப் போக்கி, நிறத்தைத் தரும். இதை எல்லாம் வயதினரும் பயன்படுத்தலாம்.

* சிலருக்கு எவ்வளவு தான் மேக்கப் போட்டாலும், சீக்கிரத்தில் கலைந்து ஆங்காங்கே திட்டு திட்டாகிவிடும். இதற்கு, ஒரு டீஸ்பூன் கேரட் ஜூஸுடன், ரோஸ் வாட்டர். அரை டிஸ்பூன், சந்தனப் பவுடர் கால் டீஸ்பூன் கலந்து, 10 நிமிடம் முகத்தில் தடவி, பிறகு கழுவி மேக்கப் போடுங்கள். மணிக்கணக்கானாலும் மேக்கப் கலையாது.

* கேரட் உலர் துருவல் (கேரட்டை தோல் எடுக்காமல், துருவி வெயிலில் நன்றாக காய வைத்து எடுத்து வையுங்கள்), வெள்ளரி விதை – தலா 50 கிராம், பயத்தம் பருப்பு, பார்லி – தலா 100 கிராம். இவற்றை மாவு மெஷினில் கொடுத்து பவுடராக அரைத்துக் கொள்ளுங்கள்.

இந்தப் பவுடரை தினமும் தேய்த்துக் குளித்தால், தோலுக்கு நல்ல நிறத்தைக் கொடுத்து, அழகை அள்ளித்தரும். விளையாடும் குழந்தைகள் முதல் தள்ளாடும் வயோதிகர்கள் வரை அத்தனை பேருக்கும் உகந்த அசத்தலான குளியல் பவுடர் இது

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply