வயதில் மூத்த மனைவி வாழ்க்கைக்கு வரமா

Loading...

வயதில் மூத்த மனைவி வாழ்க்கைக்கு வரமாஇந்திய தாம்பத்ய வாழ்வியல் கலாசாரப்படி திருமணத் தம்பதிகளில் பெண்ணிற்கு வயது குறைவாகவும், ஆணிற்கு அதிகமாகவும் இருக்க வேண்டும். இதற்கு நிறைய காரணங்கள் சொல்லப்பட்டன.

தன்னோடு வாழ்க்கையில் இணையும் பெண்ணை ஆண்தான் வழிநடத்தவேண்டும் என்பதாலும், உலக அனுபவம் ஆண்களுக்கு அதிகம் என்பதாலும் கணவர், மனைவியைவிட வயதில் சற்று அதிகமானவராக இருக்கவேண்டும் என்ற நியதி வகுக்கப்பட்டிருக்கிறது.

பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட காலம் ஒன்று இருந்தது. அப்போதும் பெண்கள் சிந்திக்கும் திறன் படைத்தவர்களாகவே இருந்தபோதிலும் அவர்களின் சிந்தனையை அவ்வளவாக அங்கீகரிக்கவில்லை. எதிர்த்து கேள்வி கேட்பதை தடுத்தார்கள். எப்போதும் அடங்கி நடக்கவேண்டும் என்றார்கள். அதனால் வயதிலும் தன்னைவிட பெண் குறைவாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். அதற்காகத்தான் தங்களைவிட வயது குறைந்த பெண்களை திருமணம் செய்தார்கள் என்ற கருத்தொன்று உண்டு.

உடல்ரீதியாக பார்த்தால் ஆண்கள் அதிக காலம் இளமையாக இருப்பார்கள். பெண்கள் பிரச வத்திற்கு பிறகு இளமைப் பொலிவை சற்று இழக்கத் தொடங்கிவிடுவார்கள். அதனால் உடற்கட்டு குலையும். ஆகவே நிகரான ஜோடியாக திகழ மனைவி, கணவரைவிட வயது குறைந்தவராக இருக்கவேண்டும் என்றார்கள். ‘பெண்கள் குறிப்பிட்ட வயதுக்குள் தாய்மையடையவேண்டும். ஆண்களுக்கு அப்படி எந்த வரம்பும் இல்லை. அதனால்தான் பெண்ணுக்கு, ஆணைவிட குறைந்த வயதிலே திருமணம் செய்துவைக்கப்படுகிறது’ என்ற கருத்தும் உண்டு.

இப்படி சொல்லப்பட்ட காரணங் களை எல்லாம் இன்றைய சமூகம் குப்பையில் தூக்கிப்போட்டுவிட்டது. இப்போது வயது ஒரு பொருட்டில்லை. தன்னை விட வயதில் மூத்த பெண்ணாக இருந்தாலும் விரும்பி மனம் ஒத்து திருமணம் செய்துகொண்டு ஆண்கள் சிறப்பாக வாழ்கிறார்கள்.

காலம் மாறிவிட்டது. அதனால் கட்டுப்பாடுகளும் தளர்த்தப் பட்டுவிட்டன. காலத்திற்கேற்ப மனிதர்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதில் தவறென்ன இருக்கிறது என்கிற குரல் ஒலிக்கத்தொடங்கிவிட்டது. அந்த குரல் திரை உலகில்தான் அதிகம் ஜொலிக்கிறது. அவ்வாறான ஜோடிகள் சிலரை பார்ப்போம்.

அபிஷேக் பச்சன்–ஐஸ்வர்யா ராய்:

ஐஸ்வர்யா ராய் தனது முந்தைய காதல் தோல்வியில் முடிந்ததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். ‘தானுண்டு தன் வேலையுண்டு’ என்றிருந்தவருக்கு அபிஷேக் பச்சனின் கண்ணியமான நட்பு கிடைத்தது. இருவரும் இணைந்து சினிமாவில் காதலர்களாக நடித்து, நிஜத்திலும் அவ்வாறே ஆனார்கள். அபிஷேக்கின் கவுரவமான காதலை ஐஸ்வர்யா ஏற்றுக் கொண்டார். இருவரும் பெற்றோரிடம் தெரிவித்தனர். இரு குடும்பமும் முறைப்படி பேசி திரு மணத்தை முடித்து வைத்தனர். ஐஸ்வர்யா, அபிஷேக்கை விட மூன்று வயது மூத்தவர்.

நர்க்கீஸ்–சுனில்தத்:

நர்க்கீஸ் முதலில் ராஜ்கபூரை காதலித்தார். அதனால் பெரும் பிரச்சினை வெடித்தது. ஏன்என்றால் ராஜ்கபூர் ஏற்கனவே திருமணமானவர். அவரது குடும்ப வாழ்க்கை நர்க்கீஸால் பெரும் பாதிப்பிற்குள்ளானது. அதை பற்றியெல்லாம் கவலைப்படாத இருவரும் இரண்டாவது திருமணத்திற்கு தயாரானார்கள். பின்பு ஏற்பட்ட மனக்கசப்பில் நர்க்கீஸ்–ராஜ்கபூரை விட்டு
விலகிவிட்டார்.

மன உளைச்சலில் நர்க்கீஸ் இருந்தார். அப்போது அவர், ‘மதர் இந்தியா’ என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். படப்பிடிப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அந்த நேரத்தில் அங்கிருந்த நடிகர் சுனில்தத் உயிரை பணயம் வைத்து நர்க்கீஸை காப்பாற்றினார். படப்பிடிப்பில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டது. ஆனால் இருவர் மனதிலும் காதல் தீ பற்றிக்கொண்டது. நர்க்கீஸ் தன்னைவிட வயதில் மூத்தவர் என்பதால் முதலில் சுனில்தத் தயக்கம் காட்டினார். பின்பு திருமணம் செய்துகொண்டார்கள். சுனில்தத்தைவிட நர்க்கீஸ் அதிக வயது கொண்டவர்.

அர்ஜூன் ராம்பால்–மேஹர்:

அர்ஜூன் ராம்பாலின் மனைவி மேஹர் புகழ்பெற்ற மாடல் அழகி. ‘மிஸ் இந்தியா’ பட்டம் பெற்றவர். இருவரின் காதலுக்கு வயது தடையாக இருந்ததில்லை. திருமணம் செய்துகொண்டு மற்றவர் களுக்கு முன்மாதிரியான ‘மாடல்’தம்பதியாக வாழ்கிறார்கள். அர்ஜூனை விட மேஹர் இரண்டு வயது மூத்தவர்.

ஆதித்யா பாஞ்சோலி–ஜரீனா:

ஜரீனா முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர். பேரழகு கொண்டவர். இவர், தன்னை விட வயதில் சிறியவரான ஆதித்யாவை காதலித்தார். ஆனால் வயதை காரணம் காட்டி நிராகரித்துவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் சற்று விலகியே இருந்தார். காதலை மறைக்க முடியவில்லை. படப்பிடிப்பு தளத்தில் ஆதித்யாவை சந்தித்து தனது காதலை வெளிப்படுத்தினார். ஆதித்யாவும் காதல்கொண்டார். வயது வித்தியாசம் மாயமானது. திருமணம் செய்து கொண்டனர். ஆதித்யாவை விட ஆறு வயது மூத்தவர் ஜரீனா.

சைப் அலிகான்–அம்ருதா:

சைப் அலிகான் இப்போது கரீனா கபூரின் கணவர். நாம் சொல்வது பழைய கதை. முதலில் அவருக்கும்– அம்ருதாவுக்கும் திருமணம் நடந்தது. அரச பரம்பரையை சேர்ந்த சைப்புக்கு சமமான அந்தஸ்தில் பெண் தேடியபோது, அவரைவிட மூத்த அம்ருதா கிடைத்தார். வயதைவிட அந்தஸ்து முக்கியம் என்று கருதி, வயதில் மூத்த பெண்ணை மணமுடித்து வைத்தார்கள். 12 வருட தாம்பத்ய வாழ்க்கைக்கு பின்பு இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு அம்ருதாவை விவாகரத்து செய்துவிட்டு, நடிகை கரீனா கபூரை திருமணம் செய்து கொண்டார். சைப் அலிகானைவிட அம்ருதாவுக்கு 12 வயது அதிகம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply