லெமன் – கோரியண்டர் ரைஸ்

Loading...

லெமன் - கோரியண்டர் ரைஸ்
தேவையானவை:
பாசுமதி அரிசி – ஒரு கப், தண்ணீர் – ஒன்றரை கப், பச்சை மிளகாய் – 2, எலுமிச்சைச் சாறு – 3 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – கால் கப், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
அரிசியை அரை மணி நேரம் ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடு செய்து… பொடி யாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, உப்பு சேர்க்கவும். தண்ணீரை வடிகட்டி அரிசியை சேர்க்கவும். 2 நிமிடம் அதிக தீயில் அடிபிடிக்காமல் கிளறவும். பிறகு, தீயைக் குறைத்து எலுமிச்சைச் சாறு, தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும். இடையில் கிளறவும். அரிசியை மலர வேகவைத்து எடுக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply