ருவிட்டரைத் தற்காலிகமாகத் தடைசெய்த பாகிஸ்தான்!

Loading...

ருவிட்டரைத் தற்காலிகமாகத் தடைசெய்த பாகிஸ்தான்!ருவிட்டரில் வெளிவந்த இஸ்லாம் மதத்திற்கெதிரான கருத்துக்களை நீக்க மறுத்ததால் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் பாகிஸ்தானில் ருவிட்டர் இணையத்தளம் தடைசெய்யப்பட்டிருந்தது.

இஸ்லாமின் தீர்க்கதரிசி முகமது நபியின் படங்களை வெளியிடுமாறு போட்டி ஒன்றை ருவிட்டர் வைத்ததென பாகிஸ்தானின் தொலைத்தொடர்புச் சபையின் தலைவர் முகமது யசீன் தெரிவித்தார். முகமதின் படங்களை வெளியிடுவது மூர்க்கமானதென பல முஸ்லிம்கள் கருதுகின்றனர் என்றார் அவர்.

எனினும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவிற்கு முன்னதாக இந்தத் தடையை அரசு நீக்கிவிட்டது. இது முன்னர் 8 மணித்தியாலங்கள் பெறப்படமுடியாதாக இருந்தது.
எனினும் அரசு தனது முடிவைப் பரிசீலித்துப் பார்த்ததுதான் இதன் தடைநீக்கத்திற்கான காரணமா அல்லது அதன் தடையினால் பொதுமக்களிடமிருந்து கிடைத்த விமர்சனங்கள்தான் தடைநீக்கத்திற்கான காரணமா என்பது தெரியவில்லை.
ருவிட்டர் தனது ருவீற்களை அகற்ற மறுத்ததால் ருவிட்டரைத் தடைசெய்யவேண்டுமெனத் தொலைத்தொடர்புச் சபைக்கு பாகிஸ்தானின் தகவல்தொடர்பு அமைச்சு ஞாயிறு மதியம் கட்டளையிட்டதாகவும் யசீன் தெரிவித்தார்.
இதற்கு மாறாக, Facebook இந்தப் போட்டிபற்றிய பாகிஸ்தானின் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு செயற்பட்டிருந்தது.

ருவிட்டரின் அல்லது Facebook இன் அதிகாரிகளிடமிருந்து இதுபற்றிய தகவல்களை அறியமுடியவில்லை.

இதேபோன்றதொரு போட்டியொன்று 2010இல் Facebook நடத்தியபோது அதன்மீது பாகிஸ்தானின் உயர்நீதிமன்றம் தடைவிதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இத்தடை பின்னர் 2 வாரங்களின் பின்னர் நீக்கப்பட்டது. இதன்பின்னர் பாகிஸ்தானில் அக்குறிப்பிட்ட பக்கத்தினை Facebook தடுத்திருந்தது. அந்த நேரத்தில் தாங்கள் பாரிய இணையத்தளங்களை இஸ்லாமிய எதிர்ப்புக் கருத்துக்கள் மற்றும் விடயங்கள்பற்றி வெளியிடுகின்றதா என்பதைத் தொடர்ந்தும் கண்காணிக்கப்போவதாகத் தெரிவித்திருந்தது.

ருவிட்டர் ஞாயிறு தடைசெய்யப்பட்டபோதும், பாகிஸ்தானிலுள்ள பலர் பயனாளரின் அமைவிடத்தை மறைக்கும் நிகழ்ச்சிநிரல்களின்மூலம் இணையத்தளத்தினைப் பயன்படுத்திக்கொண்டுதானிருந்தனர். ருவிட்டரில் உள்ளவர்களாலும் பாகிஸ்தானிய அரசின் செயற்பாட்டினால் பரவலான விமர்சனங்கள் நிலவின.

“இதனை பாகிஸ்தானின் இன்னொரு மலிவான செயற்பாடு” என்று பாகிஸ்தானியர் ஒருவர் ருவிட்டரில் குறிப்பிட்டார்.

2010 Facebook சர்ச்சையின்போது அது பல பாகிஸ்தானியர்களைத் தாங்கள் ஓர் இணையத்தளத்தினைப் பார்ப்பதா வேண்டாமா என்பதை அவரவர்கள்தான் தீர்மானிக்கவேண்டுமென்றும் அரசினால் அவர்களை நம்பமுடியாது என்றும் கேள்வி எழுப்பினர். சிலர் மேலும் ஏன் ஏனைய இஸ்லாமிய நாடுகளைவிடவும் பாகிஸ்தான் இவ்விடயத்தினைப் பெரிதாக எடுக்கவேண்டுமென்றும் குறிப்பிட்டிருந்தனர்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply