ராகி தட்டை

Loading...

ராகி தட்டை
தேவையானவை:
கேழ்வரகு மாவு – ஒரு கப், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.


விழுதாக அரைக்க:
சாம்பார் வெங்காயம் – 10 (உரித்தது), காய்ந்த மிளகாய் – 4, தனியா – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவைக்கேற்ப.


செய்முறை:
அரைக்கக் கொடுத்துள்ளவற்றை தண்ணீர் தெளித்து நைஸாக அரைக்கவும். ஆறியதும் இதை கேழ்வரகு மாவில் சேர்த்து, நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்துப் பிசையவும். பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி வாழை இலையில் லேசான தட்டைகளாக தட்டி (கையில் எண்ணெய் தடவிக்கொள்ளவும்), உலர்ந்த துணியில் போடவும். 10 நிமிடத்துக்குப் பிறகு தட்டைகளை சூடான எண்ணெயில் போட்டு, நன்றாக வெந்ததும் எடுக்கவும். ஆறியவுடன் காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply