யூடியூப் தரும் மற்றுமொரு புத்தம் புதிய வசதி

Loading...

யூடியூப் தரும் மற்றுமொரு புத்தம் புதிய வசதி.யூடியூப் நிறுவனமானது கடந்த 2012ம் ஆண்டு வீடியோ ஒன்றிலுள்ள முகங்களை மட்டும் மங்கலாக மாற்றக்கூடிய வசதியினை அறிமுகம் செய்திருந்தமை உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.
நான்கு வருடங்களுக்கு பின்னர் வீடியோவிலுள்ள எந்தவொரு பகுதியையும் ஒன்லைனில் வைத்தே மங்கலாக மாற்றும் Custom Blurring டூலினை அறிமுகம் செய்துள்ளது.

அசையும் பொருட்களையும் மங்கலாக மாற்ற முடிவதுடன், எந்தவொரு யூடியூப் பயனரும் இலகுவாக பயன்படுத்தக்கூடியதாக இருத்தல் இந்த டூலின் விசேட அம்சமாகும்.

இந்த வசதி Enhancement டூல் பகுதியில் தரப்பட்டுள்ள அதே வேளை, இதனைப் பயன்படுத்துவதற்கு மங்கலாக்கப்பட வேண்டிய பகுதியினை சதுர வடிவம் ஒன்றின் மூலம் அடையாளமிட்ட பின்னர் Enhancement பகுதியில் சென்று Blurring Effects எனும் டேப்பினுள் சென்று தெரிவு செய்து கொள்ள முடியும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply