மொறுமொறு மிக்ஸர்

Loading...

மொறுமொறு மிக்ஸர்
தேவையானவை:
கடலை மாவு – 3 கப், அரிசி மாவு – ஒரு கப், ஓமம் – 2 டீஸ்பூன், பச்சை வேர்க்கடலை – ஒரு கப், கெட்டி அவல் கால் கப், காய்ந்த மிளகாய் – 8 (அல்லது காரத்துக்கேற்ப), முந்திரி – ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
ஒரு கப் கடலை மாவுடன் ஒரு டீஸ்பூன் அரிசி மாவு, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும். மாவை பூந்தி கரண்டியில் விட்டு சூடான எண்ணெயில் முத்து முத்தாக விழும்படி தேய்த்து, பொன்னிறமாக எடுக்கவும். மீதமுள்ள 2 கப் கடலை மாவுடன் மீதமுள்ள அரிசி மாவு, ஒரு சிட்டிகை உப்பு, ஓமத்தை அரைத்து வடித்த தண்ணீர் சேர்த்துப் பிசையவும். இந்த மாவை ஓமப்பொடி அச்சில் போட்டு சூடான எண்ணெயில் பிழிந்து பொரித்து எடுக்கவும்.
அவல், வேர்க்கடலை, கறிவேப்பிலை, முந்திரி ஆகியவற்றை பொரித்துக் கொள்ளவும். காய்ந்த மிளகாயை வறுத்து, உப்பு சேர்த்து பொடியாக்கிக்கொள்ளவும். இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து… பெருங்காயத்தூள், சர்க்கரை சேர்த்து, ஆறவிட்டு காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply