மேக்கப் டிப்ஸ்…

Loading...

மேக்கப் டிப்ஸ்...மேக்கப் போடும்போது பவுன்டேஷனை லேசாகப் பயன்படுத்துவது நல்லது. அதிகபடியான பவுன்டேஷன் முகத்தின் கோடுகளை வெளிப்படுத்திக் காட்டும். மேலும் முகத்தின் சுருக்கங்கள் இதன் அதிகபடியான உபயோகத்தின் பின் விளைவாகும்.

இலேசான அல்லது எண்ணெய்ப் பசையை குறைக்கக்கூடிய பவுன்டேஷன் அல்லது ஈரப்பதமான பவுன்டேஷன் சருமத்தை மிருதுவாக்கும்.

பவுடர் பூசும்போது மேலிருந்து கீழ் நோக்கி தடவவும். கீழிருந்து மேலே பூசினால் கண்களுக்குச் சரியாகத் தெரியாத முடிகள் எழுந்து நின்று முகத்தை அசிங்கமாகக் காட்டும்.

ஐ ஷேடோவை அடிப்படையாகக் பயன்படுத்துவதால் கண்களுக்கு அதிகப்படியான ஒளி கிடைக்கிறது. பளபளக்கும் வெளிர் நிறங்களைப் பயன்படுத்திப்பாருங்கள். இவை கண் இமைகளுக்குப் பளபளப்பைக் கொடுக்கும். உங்கள் கண்களில் ஒளியையும் அதிகரிக்கும்.

முகத்தில் என்னதான் மேக்கப் போட்டிருந்தாலும் அழகான புன்னகைதான் மேலும் உங்களை அழகாக்கும். அதை நினைவில் கொள்ளுங்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply