மெக்சிகோவில் நபர் ஒருவரினால் கீழே தள்ளப்பட்ட போப்பாண்டவர்: பரபரப்பு வீடியோ!

Loading...

மெக்சிகோவில் நபர் ஒருவரினால் கீழே தள்ளப்பட்ட போப்பாண்டவர்: பரபரப்பு வீடியோ!

மெக்சிகோவில் போப் ஆண்டவரைக் கீழே தள்ளியதால் பரபரப்பு நிலவியது. இந்த சம்பவத்தின் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
மெக்சிகோவில் சுற்றுப் பயணம் செய்து வருகிற போப் ஆண்டவர் பிரான்சிஸ், அங்குள்ள மோரேலியா நகரில் பொது மக்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் ஆசி பெற ஏராளமானோர் குவிந்திருந்தனர்.
கூட்டத்தில் இருந்த குழந்தைகளைப் பார்த்து ஆசி வழங்குவதற்காக, போப் அவர்களை நோக்கி நடந்து வந்தார். அப்போது அவரைப் பார்க்கும் ஆவலில், கூட்டத்தினர் ஒருவருக்கொருவர் முண்டியடித்தனர்.

இதனால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ஒருவர் போப் ஆண்டவரை பிடித்து கீழே தள்ளி விட்டார். அதனால் நிலை தடுமாறிய போப், சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த ஒரு குழந்தை மீது விழுந்து விடக்கூடிய நிலை ஏற்பட்டது.

ஆனால் நல்ல வேளையாக உதவியாளர்களும், பாதுகாவலர்களும் அவர் விழாமல் தாங்கிப் பிடித்துக் கொண்டனர்.
இந்த சம்பவத்தால் கோபம் அடைந்த போப் ஆண்டவர் முகம் சிவக்க, தனது குரலை உயர்த்தி ஸ்பானிஷ் மொழியில், ‘‘சுய நலமாக இருக்காதீர்கள் என தன்னை தள்ளிவிட்ட நபரிடம் இரு முறை சத்தமாகக் கடிந்து கொண்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply