மூளையை பலப்படுத்தத் தேவை மூன்று “உ” க்கள்.

Loading...

மூளையை பலப்படுத்தத் தேவை மூன்று “உ” க்கள்.கருவில் உருவாகும் முதல் உறுப்பு இதயம் என்றாலும், அதனை இயக்கும் மூளைதான் மனித உடலின் தலைமைச் செயலகம். மூளையின் ஆரோக்கியத்தைத் தெரிந்துகொள்ள, ஐந்து கேள்விகள்.

1.வேலையை இன்று செய்ய வேண்டாம், நாளை செய்துகொள்ளலாம் எனத் தள்ளிப்போடுகிறீர்களா?


2.எந்த வேலை செய்தாலும் அதில் தடுமாற்றம் ஏற்படுகிறதா?


3.ஞாபகமறதி அதிகமாக இருக்கிறதா?


4.கூர்ந்து கவனிக்கும் திறன் குறைந்துவிட்டதா?


5.கவனச்சிதறல்கள் ஏற்படுகின்றனவா?
இதில் ஏதேனும் ஒன்று உங்களுக்கு இருந்தால்கூட, மூளையைக் கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள். கவனிப்பு என்றவுடன் மருத்துவரைச் சந்தித்து, ஆலோசனை பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. மூளையை ஆரோக்கியப்படுத்தும் உணவுகளையும் பயிற்சிகளையும் செய்தாலே போதும்.

மூன்று ‘உ’க்கள்
உணவு, உறக்கம், உற்சாகம் எனும் மூன்று ‘உ’க்களைப் பின்பற்றுவது மூளைக்கு அவசியம். மூளையை ஆரோக்கியமாகவைத்திருக்க, தியானம், யோகா, உடற்பயிற்சிகள் தினமும் செய்வது நல்லது. இதனால், மூளை உட்பட அனைத்து உறுப்புகளும் நலம் பெறும். அமினோ அமிலங்கள், நைட்ரஜன் ஆக்சைடு, ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் போன்ற சத்துக்கள் மூளையின் பலத்துக்கு அவசியம். வல்லாரை, அஸ்வகந்தா, வால்நட்டில் இந்தச் சத்துக்கள் நிறைவாக உள்ளன. மேலும், தர்பூசணி, சாத்துக்குடி, ஃபிளக்ஸ் விதைகள், சோயா, மீன், மாதுளை, பிரவுன் அரிசி, ஆரஞ்சு, பீட்ரூட், அடர்பச்சை நிறக் காய்கறிகள், முழுத் தானியங்கள், கறிவேப்பிலை மூளையின் செயல்திறனை மேம்படுத்த உதவும்.

‪#‎வல்லாரை‬
நம்முடைய பாரம்பரிய மருத்துவம், மூளைக்கான சிறப்பு உணவில் வல்லாரையை முதல் இடத்தில் வைத்திருக்கிறது. இதனால், வல்லாரையை சூரணமாகவும், மாத்திரையாகவும் உண்ணும் பழக்கமும் உண்டு. இதில் உள்ள நைட்ரிக் அமிலம், மூளையைச் சிறப்பாகச் செயல்படத் தூண்டும். கவனச்சிதறல்களை ஒழுங்குபடுத்தி, வேலைகளைச் சீராகச் செய்ய உதவும். மூளையில் உள்ள நியூரான்களின் வளர்ச்சிக்கு உதவும். நியூரான்கள் அழியாமல் தடுக்கும். ரத்த நாளங்களை அமைதிப்படுத்தும். தூக்கமின்மை, மன உளைச்சல் போன்ற பிரச்னைகளைச் சரிசெய்யும்.

‪#‎அஸ்வகந்தா
‬ நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் மூலிகை இது. மூளையைத் தூண்டி, செயல்படவைக்கும். தொற்றுகளிலிருந்து மூளையைக் காப்பதற்கும் உறுதியாக்குவதற்கும் உதவுகிறது. மன அழுத்தத்துக்கு எதிராகச் செயல்பட்டு, மனதையும் உடலையும் ஓய்வு பெறச்செய்யும். தினமும் 10 கிராம் அளவுக்கு, அஸ்வகந்தாவை உணவில் சேர்த்துக்கொண்டால், மூளை தொடர்பான நோய்கள் வராமல் தடுக்க முடியும்.

‪#‎வால்நட்‬ (அக்ரூட்)
மூளையின் வடிவத்தைக்கொண்டுள்ள வால்நட், மூளை சிறப்பாகச் செயல்பட உதவும். ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மூளையின் செயல்பாட்டுக்கும், சீரான இயக்கத்துக்கும் வளர்ச்சிக்கும் உதவுகின்றன. அறிவுத்திறன், சிந்திக்கும்திறன், படைப்பாற்றல் திறனை அதிகரிக்கிறது. வால்நட், மறதி நோயைத் தடுக்கும். தினமும் இரண்டு மூன்று வால்நட் சாப்பிட்டுவந்தால், மூளை செல்கள் பாதுகாக்கப்படும். புதிய செல்கள் உருவாகும். மூளையைப் பலப்படுத்தும் மூலிகைப் பால் வல்லாரைக் கீரை, அஸ்வகந்தா, நாட்டுச் சர்க்கரை – தலா அரை கிலோ எடுத்துப் பொடித்து, டப்பாவில் அடைத்துக்கொள்ளவும். தினமும் ஒரு டம்ளர் சூடான பாலில், இந்தப் பொடி ஒரு ஸ்பூன், இரண்டு வால்நட்களைப் பொடித்துச் சேர்த்துப் பருக வேண்டும்.

பலன்கள்:
அனைவரும் பருகலாம். குழந்தைகளுக்குக் கொடுக்கும்போது, அவர்களின் நினைவாற்றல் ,அறிவுத்திறன் அதிகரிக்கும். வயதாகும்போது வரும் மறதி நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள உதவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply