முருங்கைக்கீரைப் பொரியல்

Loading...

முருங்கைக்கீரைப் பொரியல்

தேவையானவை:
ஆய்ந்து எடுத்த முருங்கைக்கீரை – 250 கிராம், தேங்காய் துருவல் – 4 டீஸ்பூன், ஊற வைத்த பாசிப்பருப்பு – 4 டீஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், மிளகாய் வற்றல் – ஒன்று, பெருங்காயத்தூள், எண்ணெய் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.செய்முறை:
முருங்கைக்கீரையைப் பாசிப்பருப்பு சேர்த்து வேக வைத்து தண்ணீரை வடிகட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு… கடுகு, மிளகாய் வற்றல் போட்டு தாளித்து, வெந்த கீரையை பிழிந்து போட்டு, தேங்காய் துருவல், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.குறிப்பு:
முருங்கைக்கீரையில் அடை, வடை, கூட்டு என்று பல விதமாக தயாரிக்கலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply