முப்பருப்பு உருண்டை

Loading...

முப்பருப்பு உருண்டை
தேவையானவை:
முளைவிட்ட கொள்ளு, முளைவிட்ட கொண்டைக்கடலை, முளைவிட்ட பச்சைப்பயறு – தலா 100 கிராம், இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பூண்டுப் பல் – 2, காய்ந்த மிளகாய் – ஒன்று, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – 500 மில்லி, உப்பு – தேவையான அளவு,


செய்முறை:
கொள்ளு, கொண்டக்கடலை, பச்சைப்பயிறு ஆகியவற்றுடன்… தோல் சீவி நறுக்கிய இஞ்சி, உரித்த பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து கெட்டியாக, கொரகொரப்பாக அரைக்கவும் (முளைவிட்டிருப்பதால் தண்ணீரில் ஊற வைக்கத் தேவையில்லை). இதனுடன் உப்பு, கறிவேப்பிலை சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, எண்ணெய் காய்ந்ததும் மாவை உருண்டைகளாக உருட்டிப் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.
குறிப்பு: இந்த உருண்டைகளை மோர்க்குழம்பு, கூட்டு முதலியவற்றில் போடலாம். மாவை, பக்கோடா போல கிள்ளிப் போட்டும் பொரிக்கலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply