முந்திரி மட்டன் வறுவல்

Loading...

முந்திரி மட்டன் வறுவல்


தேவையானவை :

முந்திரி -100கிராம்

மட்டன் -1/4 கிலோ

வெங்காயம் -200 கிராம் (நறுக்கியது)

மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன்

மிளகாய்தூள் -2 டீஸ்பூன்

தனியா தூள் -2 டீஸ்பூன்

மிளகு தூள் -2 டீஸ்பூன்

சோம்பு -1 டீஸ்பூன்

உப்பு, எண்ணை -தேவைக்கேற்ப


செய்முறை:

1.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பை அதில் போட்டு தாளிக்கவும். அப்படியே முந்திரியை அதில் சேர்த்து வறுக்கவும்.

2.வெங்காயத்தை வதக்கவும். மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் சேர்க்கவும். சுத்தம் செய்து வேகவைத்த மட்டனையும் இதில் சேர்த்து போதுமான உப்பு சேர்க்கவும்.

3.மட்டனுடன் மசாலா முந்திரிப்பருப்பு சேர்த்து நன்றாக காய்ந்ததும் மிளகுத்தூளை தூவி கிளறி இறக்கவும். இப்போது வாசனையில் ஊரைக்கூட்டும் முந்திரி மட்டன் வறுவல் ரெடி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply