முடக்கத்தான் கீரை பக்கோடா

Loading...

முடக்கத்தான் கீரை பக்கோடா
தேவையானவை:
முடக்கத்தான் கீரை – ஒரு கைப்பிடி அளவு, பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு – தலா ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் – சிறிதளவு, மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி – சிறிதளவு, எண்ணெய் – 250 மில்லி, உப்பு – தேவையான அளவு.


செய்முறை:
பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவுடன்… வெங் காயம், மிளகாய்த்தூள், இஞ்சி, உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு, பொடியாக நறுக்கிய முடக்கத்தான் கீரையைப் போட்டு கெட்டியாகப் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, மாவை பக்கோடாக் களாக கிள்ளிப் போட்டு, பொன்னிறமாக வரும்வரை வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு:
முடக்கத்தான் கீரை கால்வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும். இந்தக் கீரையை துவையல், சட்னி, தோசை, அடை ஆகியவற்றி லும் சேர்க்கலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply